ஒருநாள் போட்டிகளில் நான் தொடர்ந்து விளையாட காரணம் இதுமட்டும் தான் – மனம்திறந்த ஷிகர் தவான்

Dhawan
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான ஷிகர் தவான் சமீப காலமாகவே டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மறுக்கப்பட்டு வந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுடன் முதன்மை துவக்க வீரராக களமிறங்கி வருகிறார். மேலும் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானின் மீது அதீதமான நம்பிக்கை வைத்து அவருடைய அனுபவம் ஒருநாள் போட்டிகளுக்கு உதவும் என்று கூறி அவருக்கு ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரருக்கான வாய்ப்பினை அளித்து வருகிறார். அந்த வகையில் இதுவரை கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய தவான் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னர் வரை 149 போட்டிகளில் விளையாடி 6284 ரன்கள் குவித்துள்ளார்.

dhawan

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியில் தேர்வாகியிருந்த தவான் கென்னிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 110 ரன்களை மட்டுமே குவித்ததால் அடுத்ததாக இந்திய அணிக்கு 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரோகித் சர்மா 76 ரன்களையும், தவான் 31 ரன்களையும் குவித்து களத்தில் இருந்தனர். இந்த போட்டி ஷிகர் தவானிற்கு 150-ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Rohit and Dhawan

இந்நிலையில் இந்த ஒருநாள் போட்டிக்கு முன்பாக ஷிகார் தவான் அளித்த பேட்டி ஒன்றில் தனது எதிர்கால லட்சியம் என்ன என்பது குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : எனக்கு இந்திய அணியில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த நினைக்கிறேன். என்னுடைய எண்ணம் எல்லாம் தற்போது ஒரு விடயத்தில் மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 உலகக் கோப்பையில் நான் விளையாட வேண்டும். அது மட்டுமே என்னுடைய இலக்கு.

- Advertisement -

அதற்காகவே ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி என்னை மெருகேற்றி வருகிறேன். துவக்க வீரராக நான் விளையாடுகையில் எனக்கு மிகுந்த
தன்னம்பிக்கை ஏற்படுகிறது. முதலில் 20, 30 ரன்களை குவித்து விட்டால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் அந்த வகையில் நான் கடினமாக உழைத்து வருகிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்தி வருவதாகவே நினைக்கிறேன்.

இதையும் படிங்க : அஜித் அகர்கரின் சாதனையை தகர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக வரலாறு படைத்த – முகமது ஷமி

நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் அது மட்டுமே எனது இலக்கு. அதற்காகவே கடினமாக உழைத்து வருகிறேன். கிரிக்கெட்டிற்காக என்னுடைய உடற்பகுதியையும் தற்போது வரை நான் பிட்டாக வைத்திருக்கிறேன் என தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement