அஜித் அகர்கரின் சாதனையை தகர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக வரலாறு படைத்த – முகமது ஷமி

Shami-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது லண்டன் கென்னிங்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 25.2 ஓவர்களை மட்டுமே சந்தித்து 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் 30 ரன்களையும், டேவிட் வில்லி 21 ரன்களையும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டைகளையும் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 18.4 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 114 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்களுடனும், ஷிகார் தவன் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Shami

இந்நிலையில் இந்த போட்டியில் 7 ஓவர்கள் பந்து வீசிய முகமது ஷமி 31 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதோடு இந்திய அணி சார்பாக மிகப்பெரும் சாதனை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார். அதன்படி அவர் படைத்த அந்த சாதனை யாதெனில் இந்திய அணிக்காக அதிவேகமாக 150 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

தற்போது இந்த இங்கிலாந்து போட்டியுடன் சேர்த்து 80-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அஜித் அகர்கரின் சாதனையும் அவர் தகர்த்துள்ளார். இந்திய அணி சார்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய வீரராக அஜித் அகர்கர் இந்நாள் வரை வைத்திருந்தார்.

இதையும் படிங்க : IND vs ENG : சரியான பலத்துடன் ரோஹித்தின் அருமையான யோசனையில் கிடைத்த மாபெரும் வெற்றி – என்ன நடந்தது?

97 போட்டிகளில் விளையாடிய போது அவர் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதனை தற்போது முகமது ஷமி தனது 80-வது போட்டியிலேயே தகர்த்துள்ளார். அதோடு உலக அளவில் 150 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அவர் ரஷீத் கானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement