என்னோட ஆதரவு அவருக்கு எப்போவும் உண்டு. கவலைப்பட வேண்டாம் – ஷிகர் தவான் பெருந்தன்மை

Dhawan
- Advertisement -

இந்த ஆண்டிற்கான பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான 10 அணிகள் விளையாடும் போட்டிகளையும் முறைப்படி அட்டவணைப்படுத்தி போட்டிகளில் தேதி விபரங்கள் மைதானங்கள் என அனைத்தையும் வெளியிட்ட பிசிசிஐ தற்போது வீரர்களை பாதுகாப்பாக பயிற்சியிலும் ஈடுபட வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடரானது கோலாகலமாக நடைபெற உள்ளது.

ipl

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடருக்கான 10 அணிகளுக்கான கேப்டன் மற்றும் வீரர்களும் உறுதி செய்யப்பட்டு விட்டனர். அந்த வகையில் ஏற்கனவே தொடர்ந்து பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த மயங்க் அகர்வால் ராகுலின் வெளியேற்றம் காரணமாக புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மெகா ஏலத்திற்கு முன்னதாக நேரடியாக அணியில் தக்க வைக்கப்பட்ட அவர் பஞ்சாப் அணிக்காக இந்த சீசனுக்கான கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி தற்போது முழுநேர கேப்டனாக மயங்க் அகர்வால் முதல் முறையாக இந்த சீசனில் செயல்பட உள்ளார். இதன் காரணமாக அவரது கேப்டன்சி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளது. பஞ்சாப் அணியில் பல வீரர்கள் கழற்றி விடப்பட்டு தற்போது ஒட்டுமொத்தமாக புதிய அணியாக உருப்பெற்று நிற்கிறது.

Agarwal

அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானையும் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து இருந்தது. கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் இம்முறை பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வாலுடன் விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், தன்னுடைய ஆதரவு எப்போதும் அவருக்கு உண்டு என தவான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : பஞ்சாப் அணிக்காக விளையாடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையிலேயே பஞ்சாப் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. ஏனெனில் நான் ஒரு சரியான பஞ்சாபி நபர். அது என் ரத்தத்திலேயே உள்ளது. எனவே இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். இம்முறை பஞ்சாப் அணி சிறப்பான வீரர்களை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : அவரு இல்லாம சி.எஸ்.கே சமாளிக்க போறது கொஞ்சம் கஷ்டம் தான் – இர்பான் பதான் ஓபன்டாக்

எனவே இந்த தொடரை நாங்கள் வெற்றியுடன் முடிப்போம் என தவான் கூறினார். மேலும் அகர்வால் குறித்து தொடர்ந்து பேசிய அவர் : மயங்க் அகர்வால் மிகச்சிறந்த வீரர். அவர் கேப்டனாக செயல்படும் போது நான் என்னுடைய ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குவேன். மேலும் அவருடன் இணைந்து பேட்டிங் செய்ய இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சி என்று தவான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement