அவரு இல்லாம சி.எஸ்.கே சமாளிக்க போறது கொஞ்சம் கஷ்டம் தான் – இர்பான் பதான் ஓபன்டாக்

- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் 26-ஆம் தேதி 15ஆவது ஐபிஎல் தொடரானது துவங்க உள்ளது. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் நடைபெறும் இந்த தொடரானது 2 மாதம் ரசிகர்களை குஷிப்படுத்த தயாராக உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

CSK-2

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேராதரவைப் பெற்று வரும் சிஎஸ்கே அணிக்கு இம்முறையும் ஆதரவு அதிகம் என்றால் அது மிகை அல்ல. அந்த வகையில் சிஎஸ்கே அணி இந்த ஆண்டும் மிக பலம் வாய்ந்த அணியாக காணப்பட்டாலும் ஒரு சில வீரர்கள் காயம் அடைந்துள்ளது அந்த அணிக்கு சிறிய பிரச்சனையை தரும் என்று கூறலாம்.

அந்த வகையில் இந்த வருட ஐ.பி.எல் மெகா ஏலத்தின் போது 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட தீபக் சாஹர் தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணிக்கு எதிரான தொடரை தவறி விட்டது மட்டுமின்றி தற்போது ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

deepak

இது குறித்து தற்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் : சிஎஸ்கே அணி தீபக் சாஹரின் இடத்தை எவ்வாறு நிரப்ப போகிறது என்பது புரியவில்லை. ஏனெனில் தீபக் சாஹர் பவர் பிளே ஓவர்களிலும் சரி, அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் சரி மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுக்கக் கூடிய ஆற்றல் உடையவர்.

- Advertisement -

அவரது இந்த வெற்றிடம் நிச்சயம் சென்னை அணிக்கு பின்னடைவு கொடுக்கும். தீபக் சாஹர் இடத்தில் இறங்க இளம் வீரர்கள் இருந்தாலும் அவரைப் போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா என்று கேட்டால் அது சந்தேகம்தான்.

இதையும் படிங்க : தரமான வீரர்! ஒரே போட்டி ஏகப்பட்ட சாதனைகளை படைத்த பாபர் அசாம் – பாராட்டும் இந்திய ரசிகர்கள்

இருப்பினும் சிஎஸ்கே அணியில் நிறைய வீரர்கள் இருப்பதனால் அந்த இடத்தை யார் வேண்டுமானாலும் நிரப்பலாம் ஆனாலும் அவர்களால் அவரது இடத்தை நிரப்ப முடியுமா என்பது தெரியாது. எனவே தீபக் சாஹரை நிச்சயம் சிஎஸ்கே அணி பெரிய அளவில் தவறவிடும் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement