ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை தோற்கடித்த ஆர்சிபி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது.
அடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை மும்பை தோற்கடித்த அசத்தியது. இதைத் தொடர்ந்து குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியை மும்பை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் வெல்லும் அணி ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் பெங்களூருவுடன் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த தகுதி பெறும்.
ஃபைனலில் பெங்களூருவுடன் யார்:
இம்முறை இறுதிப் போட்டியில் யார் வந்தாலும் அவர்களை தோற்கடித்து ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் இம்முறை ரஜத் படிதார் தலைமையில் ஆரம்பம் முதலே அசத்தும் ஆர்சிபி அணி வெளியூரில் விளையாடிய 7 போட்டிகளிலும் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. அத்துடன் வழக்கத்துக்கு மாறாக இம்முறை அந்த அணியின் பவுலிங் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எனவே இம்முறை சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டு விராட் கோலி 18 வருடங்களாக கோப்பையை வெல்லாத குறையை ஆர்சிபி தீர்க்குமா என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கோப்பை வெல்ல வேண்டும் என்று தாம் விரும்புவதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு”
தவான் ஆதரவு:
“இம்முறை ஐபிஎல் மிகவும் சுவாரசியமாக இருந்து வருகிறது. இறுதிப் போட்டியை பொறுத்த வரை என்னுடைய ஆதரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருக்கும். அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மும்பை அணியில் நல்ல சமநிலையும் இருக்கிறது. சரியான நேரத்தில் அவர்கள் வெற்றிக்குத் தேவையான வேகத்தைப் பெற்றது அபாரமானது”
இதையும் படிங்க: நேற்று கருண் நாயர் 100.. இன்று கேஎல் ராகுல் அர்ப்பணிப்பு.. இந்தியாவின் 2 கற்களுக்கு பீட்டர்சன் பாராட்டு
“அவர்கள் மிகவும் வலுவான மற்றும் சமநிலை பொருந்திய அணியாக இருக்கிறார்கள். எனவே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நானும் இருக்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப்பை தோற்கடித்தால் மட்டுமே மும்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை தகுதி பெற்றால் கடைசி 5 ஃபைனல்களில் கோப்பையை வென்றுள்ள மும்பை இம்முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல பிரகாச வாய்ப்புள்ளது.



