நேற்று கருண் நாயர் 100.. இன்று கேஎல் ராகுல் அர்ப்பணிப்பு.. இந்தியாவின் 2 கற்களுக்கு பீட்டர்சன் பாராட்டு

Kevin Pieterson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறப்போகும் அத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ரோஹித் சர்மா விராட் கோலி, ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி இங்கிலாந்தில் களமிறங்க உள்ளது.

அதற்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி மே 30ஆம் தேதி கேன்டர்பரி நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் 8 வருடங்கள் கழித்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ள கருண் நாயர் இரட்டை சதத்தை அடித்து 204 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கருண் நாயர் 100:

அதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதன்மை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் தம்முடைய இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். அவருடன் சேர்ந்து சர்பராஸ் கான் 92, துருவ் ஜுரேல் 94 ரன்களை எடுத்ததால் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 557 ரன்கள் குவித்து அசத்தியது. இதற்கிடையே ஐபிஎல் தொடர் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

அத்தொடரில் இதுவரை வெளியேறிய அணிகளில் இடம் பிடித்துள்ள இந்திய வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்துக்கு பயணிக்கத் துவங்கியுள்ளனர். அது போன்ற சூழ்நிலையில் டெல்லி அணிக்காக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுல் தம்மை விரைவாக இங்கிலாந்துக்கு அனுப்புமாறு பிசிசிஐயை கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனெனில் எவ்வளவு அனுபவத்தைக் கொண்டிருந்தாலும் இங்கிலாந்தில் விளையாடுவது சவாலான ஒன்றாகும்.

- Advertisement -

ராகுலின் அர்ப்பணிப்பு:

மறுபுறம் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி விளையாடும் 2வது போட்டி விரைவில் துவங்க உள்ளது. அது போக இந்தியா ஏ அணிக்கு எதிராக சுப்மன் கில் தலைமையிலான முதன்மை இந்திய அணியும் ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. எனவே அந்த 2 போட்டிகளிலும் தாம் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பிசிசிஐ’யிடம் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கை கொடுக்காமல் களத்தில் மோதல்.. ஹர்டிக் பாண்டியாவுடன் சண்டையா? சுப்மன் கில் விளக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் ராகுல் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார். இந்நிலையில் கருண் நாயர், ராகுல் ஆகியோர் இந்திய அணியின் ஜொலிக்கபி போகும் கற்கள் என்று இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில். “நேற்று கருண் நாயர் சதத்தை அடித்தார். இன்று கேஎல் ராகுல் டெஸ்ட் தொடருக்கு எக்ஸ்ட்ரா பயிற்சிகளை எடுப்பதற்காக முன்கூட்டியே தம்மை இங்கிலாந்துக்கு அனுப்புமாறு பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இருவரும் கற்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement