நாங்க செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைச்சுடுச்சு.. ஆர்சிபி’யிடம் சந்தித்த தோல்வியால் ஷிகர் தவான் வருத்தம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பெங்களூருவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வியை சந்தித்தது. பெங்களூருவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 176/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் தவான் 45 ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

பின்னர் 177 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 3, க்ரீன் 3, மேக்ஸ்வெல் 3, ரஜத் படிடார் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் விராட் கோலி எதிர்புறம் நங்கூரமாக விளையாடி 77 ரன்கள் கொடுத்தார். அதை பயன்படுத்தி கடைசியில் தினேஷ் கார்த்திக் 28*, மகிபால் லோம்ரர் 17* ரன்கள் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

தவான் வருத்தம்:
அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டு வந்த பெங்களூரு வெற்றி பாதைக்கு திரும்பியது. மறுபுறம் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் ஷாம் கரண் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே விராட் கோலி எட்ஜ் கொடுத்தார்.

ஆனால் அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஜானி பேர்ஸ்டோ கோட்டை விட்டார். அது போக 33 ரன்களில் மீண்டும் விராட் கோலி கொடுத்த கேட்சை பஞ்சாப் தவற விட்டது. அப்படி மகத்தான வீரரான விராட் கோலி கொடுத்த 2 கேட்ச்களை தவற விட்டதால் அதற்கு தண்டனையாக தோல்வி கிடைத்ததாக பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இது நல்ல போட்டியாக அமைந்தது. நாங்கள் போட்டியை மீண்டும் எடுத்து வந்தோம். ஆனால் கடைசியில் தோற்றோம். நாங்கள் 10 – 15 ரன்கள் குறைவாக எடுத்தோம். குறிப்பாக முதல் 6 ஓவர்களில் நான் சற்று மெதுவாக விளையாடினேன். அந்த 10 – 15 ரன்கள் போலவே கேட்ச்சும் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி 70க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தார்”

இதையும் படிங்க: 157.14 ஸ்ட்ரைக் ரேட்.. பாபர் அசாமை முந்திக்கொண்ட கிங் கோலி.. முதல் ஆசிய வீரராக மாபெரும் சாதனை

“நாங்கள் அவரைப் போன்ற கிளாஸ் வீரரின் கேட்சை தவற விட்டோம். அதற்கான விலையை கொடுத்தோம். ஒருவேளை நாங்கள் அந்த கேட்சை பிடித்திருந்தால் 2வது பந்திலேயே போட்டி எங்கள் பக்கம் திரும்பியிருக்கலாம். ஆனால் அங்கேயே திருப்பு முனையை தவ றவிட்டோம், அதற்கு விலையாக வெற்றியை நாங்கள் கொடுத்தோம்” என்று கூறினார்.

Advertisement