157.14 ஸ்ட்ரைக் ரேட்.. பாபர் அசாமை முந்திக்கொண்ட கிங் கோலி.. முதல் ஆசிய வீரராக மாபெரும் சாதனை

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியது. பெங்களூருவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 176/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து 177 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 3, க்ரீன் 3, மேக்ஸ்வெல் 3, ரஜத் படிடார் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிர்ப்புறம் நங்கூரமாக நின்று 77 ரன்கள் அடித்தார். அந்த உதவியுடன் கடைசியில் தினேஷ் கார்த்திக் 28*, மகிபால் லோம்ரர் 17* ரன்கள் அடித்து பெங்களூருவை வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

முதல் ஆசிய வீரராக:
அதனால் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் ஹார்ப்ரீத் ப்ரார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே கொடுத்த கேட்சை பஞ்சாப் தவற விட்டதை பயன்படுத்திய விராட் கோலி சவாலான பிட்ச்சில் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடி 11 பவுண்டரி 2 சிக்சருடன் 77 (49) ரன்களை 157.14 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார்.

அதனால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2024 டி20 உலகக் கோப்பையில் கழற்றி விட நினைக்கும் இந்திய தேர்வுக் குழுவுக்கும் விராட் கோலி தக்க பதிலடி கொடுத்தார். அதை விட இந்த போட்டியில் அடித்த 77 ரன்களையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 92 அரை சதங்களும் 8 சதங்களும் அடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் நூறு 50+ ரன்களை அடித்த முதல் ஆசிய வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி படத்துள்ளார்.

- Advertisement -

இந்த சாதனையை சமீபத்திய பிஎஸ்எல் தொடரில் பாகிஸ்தான் நட்சத்திரம் பாபர் அசாம் படைக்க பிரகாச வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அதில் தடுமாறிய அவர் அந்த வாய்ப்பை கோட்டை விட்ட நிலையில் விராட் கோலி இந்த புதிய வரலாற்றை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில் : 110
2. டேவிட் வார்னர் : 109
3. விராட் கோலி : 100*
4. பாபர் அசாம் : 98
5. ஜோஸ் பட்லர் : 86

இதையும் படிங்க: அந்த விளம்பரத்துக்காக நான் வேணும்ங்கிறது தெரியும்.. என்கிட்ட இன்னும் தெம்பு இருக்கு.. தேர்வுக்குழுவுக்கு கோலி பதிலடி

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் படைத்துள்ளார். விராட் கோலிக்கு (12094) அடுத்தபடியாக ரோகித் சர்மா (11199*) அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை கழற்றி விட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement