அந்த விளம்பரத்துக்காக நான் வேணும்ங்கிறது தெரியும்.. என்கிட்ட இன்னும் தெம்பு இருக்கு.. தேர்வுக்குழுவுக்கு கோலி பதிலடி

Virat Kohli 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 45, ஜிதேஷ் சர்மா 27, சசாங் சிங் 21* ரன்கள் எடுத்த உதவியுடன் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய பெங்களூருவுக்கு டு பிளேஸிஸ் 3, கேமரூன் கிரீன் 3, கிளன் மேக்ஸ்வெல் 3, படிடார் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 77 (49) ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 28* மஹிப்பால் லோம்ரர் 17* ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

விராட் கோலியின் பதிலடி:
இந்த வெற்றிக்கு 77 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவரை 2024 20 உலகக் கோப்பையில் கழற்றி விடுவதற்கு இந்திய தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளி வந்தன. குறிப்பாக ஸ்லோவான வெஸ்ட் இண்டீஸ் பிட்ச்களில் சரிப்பட்டு வர மாட்டார் என்பதால் அவரை கழற்றி விடப்பட உள்ளதாக செய்திகள் தெரிவித்தனர்.

ஆனால் இன்று கிட்டத்தட்ட அதே போன்ற பிட்ச்சில் அசத்திய விராட் கோலி 77 ரன்கள் அடித்து தன்னுடைய தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையை தம்மை வைத்து பிரபலப்படுத்த ஐசிசி முடிவு எடுத்துள்ளதை அறிவேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். எனவே அதில் அசத்துவதற்கு தேவையான திறமை இப்போதும் தன்னிடம் இருப்பதாக அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழுவுக்கு மறைமுக பதிலடியையும் விராட் கோலி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட் என்று வரும் போது உலகின் பல்வேறு பகுதிகளில் அதை விளம்பரப்படுத்துவதற்காக எனது பெயர் இப்போது இணைக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். இப்போதும் என்னிடம் அந்த திறமை இருப்பதாக நான் யூகிக்கிறேன். கடந்த 2 மாதங்கள் எனக்கும் என் குடும்பத்திற்கும் சாதாரணமாக உணர நல்ல அனுபவம் கிடைத்தது”

இதையும் படிங்க: எல்லாரும் என்னோட சாதனையை பெருசா பேசுறாங்க.. ஆனா என்னோட சாதனையே வேற.. விராட் கோலி பேட்டி

“குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் கொடுத்ததற்காக கடவுளுக்கு இதை விட நன்றியுடன் இருந்திருக்க முடியாது. சாலையில் செல்லும் போது மற்றொரு நபரால் அடையாளம் காணப்படாமல் இருப்பது ஒரு அற்புதமான அனுபவம். நான் தொடர்ந்து விளையாட வருவேன். தொடர்ந்து வெற்றிக்காக முயற்சிப்பேன் என்பதே நான் இங்கே கொடுக்கக்கூடிய வாக்குறுதியாகும்” என்று கூறினார்.

Advertisement