எல்லாரும் என்னோட சாதனையை பெருசா பேசுறாங்க.. ஆனா என்னோட சாதனையே வேற.. விராட் கோலி பேட்டி

Virat Kohli 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 4 விக்கெட் வித்யாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 176/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45, ஜிதேஷ் சர்மா 27, சஷாங் சிங் 21* (8) ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 177 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 3, கேமரூன் கிரீன் 3, ரஜத் படிடார் 18, கிளன் மேக்ஸ்வெல் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் எதிர்புறம் நங்கூரமாக விளையாடிய நட்சத்திர துவக்க வீரர் விராட் கோலி 11 பவுண்டரி 2 சிக்சருடன் 77 (49) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பெரிய சாதனை:
அதை வீணடிக்காமல் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் 28* (10), மஹிபால் லோம்ரர் 17* (8) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்ததால் பெங்களூரு போராடி வெற்றி கண்டது. அதனால் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 77 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போட்டியில் ஆரஞ்சு தொப்பியை வென்றது உட்பட தம்முடைய சாதனைகளைப் பற்றியே ரசிகர்கள் அதிகமாக பேசுவதாக விராட் கோலி கூறியுள்ளார். ஆனால் தம்மை பொறுத்த வரை சாதனையை விட அணிக்காக பெற்றுக் கொடுக்கும் வெற்றியும் அதனால் கிடைக்கும் நினைவுகளும் தான் பெரிய சாதனை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பெங்களூரு ரசிகர்கள் பல வருடங்களாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். நீங்கள் விளையாட்டில் விளையாடும் போது சாதனைகள், புள்ளிவிவரங்கள், நம்பர்களை பற்றி மக்கள் அதிகம் பேசுவார்கள். ஆனால் கடைசியில் திரும்பிப் பார்க்கும் போது அது நீங்கள் உருவாக்கிய நினைவுகள். எனக்கு கிடைக்கும் பாராட்டு மற்றும் ஆதரவு அபாரமானது. அணிக்காக நான் அதிரடியான துவக்கத்தை கொடுக்க முயற்சித்தேன்”

இதையும் படிங்க: 77 ரன்ஸ்.. 2வது பந்திலேயே சொதப்பிய பஞ்சாப்பை.. வெச்சு செய்த கிங் கோலி.. வெற்றியை பறித்தது எப்படி?

“ஆனால் விக்கெட் விழும் போது நீங்கள் மெதுவாக விளையாட வேண்டும். இது வழக்கமான ஃபிளாட் பிட்ச் இல்லை. போட்டியை நான் ஃபினிஷிங் செய்யாததால் ஏமாற்றத்தை சந்தித்தேன். பந்து சரியான இடத்தில் வந்தும் டீப் பாய்ண்ட் திசையில் அடித்தேன். நான் கவர் ட்ரைவ் நன்றாக அடிப்பேன் என்பது எதிரணிக்கு தெரியும். எனவே அவர்கள் இடைவெளியில் என்னை அடிப்பதற்கு அனுமதிக்கவில்லை. நீங்கள் அங்கேயும் இங்கேயும் விளையாட திட்டத்துடன் வர வேண்டியுள்ளது” என்று கூறினார்.

Advertisement