- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ப்ளாக் பண்ணிட்டாங்க.. 11இல் 2 வருஷம் மட்டுமே பாத்துருக்கேன்.. என் மகனை பார்க்க இதை செய்றேன்.. தவான் சோகம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர். 2010 – 2023 வரையிலான காலகட்டங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நாட்டுக்காக விளையாடிய அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல உதவியதை மறக்க முடியாது. ஆனால் அப்படிப்பட்ட அவருடைய மண வாழ்வு கசப்பாகவே இருந்து வருகிறது.

ஆயிஷா முகர்ஜி எனும் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட தவானுக்கு ஜோரவர் எனும் பையன் உள்ளார். அதற்கு முன்பாகவே 2 பெண் குழந்தைகளுக்கு தாயான அவரை 2011இல் தவான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களில் அவர்களுக்கிடையே மன கசப்பு ஏற்பட்டதால் 2023இல் விவாகரத்து செய்து கொண்டனர்.

- Advertisement -

தவான் சோகம்:

முன்னதாக மனக் கசப்பு ஏற்பட்ட சில வருடங்களில் தவான் மகனை அழைத்துக்கொண்டு அவருடைய மனைவி ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து விட்டார். அப்போது இருந்து மகனை அவரிடம் நேரில் காட்டாமல் ஆயிஷா தடுத்து வருகிறார். இத்தனைக்கும் குறிப்பிட்ட இடைவெளிகளில் வீடியோ காலில் பேச விட வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தும் ஆயிஷா தனது மகனை தவானுக்கு காட்டாமலேயே இருந்து வருகிறார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் தவான் சோகத்துடன் பேசியது பின்வருமாறு. “எனது மகன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறேன். என்னை பிளாக் செய்திருந்தாலும் அவருக்கு 3 – 4 நாட்களுக்கு ஒருமுறை இப்போதும் மெசேஜ் செய்து வருகிறேன். அதை அவர்கள் படிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது பையன் அதை படித்தாலும் இல்லா விட்டாலும் அன்பான செய்திகளை அனுப்புவது என்னுடைய வேலை”

- Advertisement -

காத்திருக்கும் தவான்:

“எனது மகனைப் பார்த்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. தொலைபேசியில் பேசி ஒரு வருடம் முடிந்து விட்டது. அது கடினம் என்றாலும் இந்த சூழ்நிலைகளில் நீங்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். எனது மகனை மிஸ் செய்யும் நான் அவரிடம் கனவு உலகில் பேசுகிறேன். தினந்தோறும் அவரிடம் பேசி, கட்டிப்பிடிப்பது போல் உணர்வுபூர்வமாக செய்கிறேன்”

இதையும் படிங்க: முடியும் ரோஹித் சர்மாவின் கேரியர்.. இந்தியாவின் கேப்டனாகும் பும்ராவின் கம்பேக் பற்றி வெளியான தகவல்

“எனது எனர்ஜியை கனவாக போடுகிறேன். அது மட்டுமே என்னுடைய மகனை மீண்டும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய ஒரே வழியாகும். அவரிடம் தினமும் பேசி விளையாடி மகிழ்வது போல் இப்போதே நான் உணர்ந்து வருகிறேன். தியானம் செய்யும் போதும் இவற்றை நான் கற்பனையாக நினைக்கிறேன். எனது பையன் தற்போது 11 வயது நிரம்பியுள்ளார். ஆனால் அவரது வாழ்வில் இரண்டரை வருடம் மட்டுமே நான் அவரை பார்த்துள்ளேன்” என்று கூறினார்.

- Advertisement -