இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். அவருடைய தலைமையில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதே போல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் அவரது தலைமையில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
அதன் காரணமாக கடைசி போட்டியில் ரோஹித் சர்மா தம்மைத் தாமே அணியிலிருந்து நீக்கிக்கொண்டார். அதனால் ஒரு தொடரின் பாதியில் தன்னைத்தானே நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையையும் ரோஹித் படைத்தார். அத்துடன் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேரியர் முடிந்ததாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் 37 வயதாகும் அவர் 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடியும் அரை சதத்தை கூட அடிக்கவில்லை.
ரோஹித் கேரியர்:
மறுபுறம் அதே தொடரின் முதல் போட்டியில் மிரட்டலாக பவுலிங் செய்த பும்ரா 8 விக்கெட்டுகள் எடுத்து கேப்டனாக 294 ரன்கள் வித்யாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். மற்ற போட்டிகளிலும் தனி ஒருவனாக வெற்றிக்கு போராடிய அவர் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்தார். அதனால் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாத அவர் எப்போது மீண்டும் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் கேரியர் முடிந்துள்ளதாக செய்தி வெளியாக்கியுள்ளது. ஏனெனில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை கழற்றி விட முடிவெடுத்துள்ள பிசிசிஐ பும்ராவை புதிய கேப்டனாக நியமிக்க விரும்புகிறது. எனவே 2025 ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கவுள்ள பும்ரா அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.
பும்ரா கம்பேக்:
இது பற்றி பிடிஐ இணையத்தில் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி தெரிவித்தது பின்வருமாறு. “பும்ரா இன்னும் முழுமையாக பவுலிங் செய்ய துவங்கவில்லை என்பது முக்கிய பிரச்சினையாகத் தெரிகிறது. அதனால் சாம்பியன்ஸ் டிராபிக்குள் அவர் முழுமையாக ஃபிட்டாக முடியாது என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். எனவே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கம்பேக் கொடுக்கலாம்”
இதையும் படிங்க: அஸ்வின் சொன்னது போல 5 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்து தவறு செய்ததா இந்திய அணி.. துபாய் புள்ளிவிவரம்
“அப்படியே இங்கிலாந்தில் நடைபெறும் தொடரிலும் அவர் இந்தியாவை வழி நடத்துவார். ரோகித் சர்மா மீண்டும் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லை” எனக் கூறினார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியதால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



