ஐசிசி 2025 சாம்பியன்ஸ் கோப்பை ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடரில் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அதில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று துபாய்க்கு புறப்பட்டு சென்றது.
இதைத்தொடர்ந்து 2013க்குப்பின் 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முகமது சிராஜ் கழற்றி விடப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது. அதை விட 15 பேர் கொண்ட அணியில் 5 ஸ்பின்னர்களை தேர்வு செய்யப்பட்டதும் நிறைய முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
அஸ்வின் விமர்சனம்:
அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகிய 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் வருண் சக்கரவர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் துபாய் மைதானம் பெரியளவில் சுழலுக்கு சாதகமாக இருக்காது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் 5 ஸ்பின்னர்கள் எதற்கு என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் துபாய் மைதானத்தில் ஸ்பின்னர்களின் தாக்கத்தைப் பற்றி பார்ப்போம். சமீபத்தில் இதே துபாய் மைதானத்தில் ஐஎல் டி20 தொடரின் 2024/25 சீசன் நடைபெற்று முடிந்தது. அந்த மைதானத்தில் நடைபெற்ற 15 போட்டிகளில் 68% வேகப்பந்து வீச்சாளர்கள் தான் எடுத்துள்ளார்கள். வெறும் 32% விக்கெட்டுகளை மட்டுமே ஸ்பின்னர்கள் எடுத்துள்ளார்கள்.
துபாய் புள்ளிவிவரங்கள்:
இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடராக நடைபெறுகிறது என்று சிலர் வாதிடலாம். அது போன்ற சூழ்நிலையில் துபாய் மைதானத்தில் 2009 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அப்போதிலிருந்து இதுவரை அங்கே 25 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த 25 போட்டிகளில் மொத்தம் வீழ்த்தப்பட்ட 321 விக்கெட்டுகளில் 183 அதாவது 57% விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்துள்ளார்கள்.
இதையும் படிங்க: 30க்கு 20 ஓவர்ஸ்.. இதுவே இந்தியாவா இருந்தா வெளுத்து விட்ருப்பாங்க.. அவங்ககிட்ட கத்துக்கோங்க.. பசித் அலி விமர்சனம்
43% ஸ்பின்னர்கள் எடுத்துள்ளார்கள். அதே சமயம் 4.63 என்ற எக்கனாமியில் ஸ்பின்னர்கள் ரன் ரேட்டை கட்டுப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் விக்கெட்டுகள் அடிப்படையில் வேகப்பந்து வீச்சாளர்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். எனவே பும்ரா இல்லாத சூழ்நிலையில் ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுக்காமல் 5 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்து இந்தியா தவறு செய்துள்ளதா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



