ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அந்தத் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் இதே நியூஸிலாந்து அணியை இந்தியாவாக இருந்தால் வெளுத்து விட்டிருப்பார்கள் என்று முன்னாள் வீரர் பசித் அலி பாகிஸ்தானை சாடியுள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்தியாவிடம் கற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கும் அவர் அது பற்றி பேசியது பின்வருமாறு. “பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத்திடம் 0 செயல்முறைகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் வாரியம் அவர் பக்கம் இருக்கிறது. கராச்சி போன்ற மைதானத்தில் எப்படி நீங்கள் குறிப்பிட்ட பவுலரை எதிர்கொண்டு ரன்கள் குவிக்க வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும்”
இந்தியா வெளுப்பாங்க:
“அதை செய்யாத நீங்கள் கொஞ்சம் மூளையை உபயோகங்கள். இதே நியூசிலாந்து அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட விடுங்கள் அப்போது வித்தியாசம் தெரியும். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இறங்கி வந்து அடிக்க மாட்டார்கள் என்பதை தெரிந்தே மிட்சேல் சான்ட்னர் லூப்பி பிளைட் பந்துகளை அதிகமாக வீசினார். அதே பந்துகளை ரோஹித், கோலி, கில், ராகுல், பாண்டியா, ஸ்ரேயாஸ் போன்ற இந்திய வீரர்களிடம் வீசிப் பாருங்கள்”
“அவர்கள் அதை மைதானத்தின் மூன்றாவது ரசிகர்கள் மாடிக்கு பறக்க விடுவார்கள். சமீபத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்தார்கள். அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டை 30, 20 ஓவர்கள் என 2 வகையாக பிரித்துக் கொள்கிறார்கள். 78 (64) ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் முதலில் பந்தின் மீது தன்னுடைய கண்களை வைத்து அடித்தார். பொறுமையுடன் நேராக அடிக்கக் கூடிய வீரர்கள் தங்களுடைய கவனத்தை இழக்க மாட்டார்கள்”
இந்தியாவிடம் கத்துக்கோங்க:
“அது போன்ற வீரர்கள் தான் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவிப்பார்கள். கில் தனது விளையாடும் விதத்தில் மாற்றங்களை செய்து அசத்துகிறார். முதலில் பேட்டிங் செய்வதும் சேசிங் செய்வதும் வித்தியாசமான விஷயங்கள். ஃபகார் ஜமான் சேசிங் செய்வதில் அசத்துகிறார். ஏனெனில் அவருக்கு முன்னே இலக்கு இருக்கிறது”
இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்தி என்ன பயன்? இதை செஞ்சு இந்தியாவையும் கையோடு சாய்ப்போம்.. சல்மான் பேட்டி
“ஆனால் முதலில் பேட்டிங் செய்யும் போது அவரால் அசத்த முடியவில்லை. கேம் சேஞ்சரான அவர் முதல் 15 – 20 வரை விளையாட வேண்டும். இந்திய ஸ்பின்னர்கள் ரன்களை தடுக்க விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்புடன் பவுலிங் செய்கிறார்கள். அதற்காக அழுத்தத்தை உண்டாக்கும் அவர்கள் ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டை எடுக்க முயற்சிப்பதில்லை. ஆனால் பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டை எடுக்க முயற்சிக்கிறார்கள். அதுவே வித்தியாசம்” என்று கூறினார்.



