உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஷிகர் தவான் வெளியிட்ட முதல் பதிவு – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

Dhawan
Advertisement

இந்திய அணியின் அனுபவ துவக்க வீரரான ஷிகர் தவான் எதிர்வரும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. அண்மையில் வெளியான 15 வீரர்கள் கொண்ட உலகக்கோப்பை இந்திய அணியில் தவானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி தவான் இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.

அதோடு இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வந்த அவர் கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கடைசியாக ஷிகர் தவான் 2022-ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கவே இல்லை. அவர் இடத்தில் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கே வாய்ப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

ஐசிசி தொடர்களை பொறுத்தவரை ஸ்டார் பிளேயராக விளையாடி வரும் ஷிகர் தவான் 65+ சராசரியோடு மிகச் சிறப்பான பங்களிப்பை பல ஆண்டுகாலமாக வழங்கி வந்தார். அவர் இந்த தொடரில் இடம் பெறாமல் போனது பலருக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இடம்பெறாத தவான் முதல் முறையாக தனது டிவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : அணியில் உள்ள வீரர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இதையும் படிங்க : சூதாட்ட புகாரில் ஆதாரத்துடன் சிக்கி கைது செய்யப்பட்ட 2014 டி20 உ.கோ சாம்பியன் இலங்கை வீரர் – பின்னணி விவரங்கள் இதோ

2023 ஆம் ஆண்டு உலக கோப்பையை எதிர்பார்த்து 1.5 பில்லியன் மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களது நம்பிக்கை மற்றும் கனவு உங்கள் கையில் உள்ளது. பெருமையுடன் கோப்பையை வீட்டிற்கு கொண்டு வாருங்கள் என ஷிகர் தவான் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement