IPL 2023 : விராட் கோலியை விட அதிவேகமாக இரட்டை சாதனை படைத்த ஷிகர் தவான் – ஆனாலும் பாராட்டுக்கள் தான் இல்ல

Shikhar Dhawan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில் ராஜஸ்தானை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் தங்களுடைய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்து முதல் கோப்பையை வெல்லும் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 197/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 60 (34) ரன்களும் கடைசி வரை அவுட்டாகாமல் நங்கூரமாக செயல்பட்ட கேப்டன் ஷிகர் தவான் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (56) ரன்களும் எடுத்தனர்.

PBKS vs RR

- Advertisement -

அதைத்தொடர்ந்து 198 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 11, அஷ்வின் 0, பட்லர் 19, படிக்கல் 21, ரியன் பராக் 20 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் போராடி 42 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சிம்ரோன் ஹெட்மயர் 36 (18), துருவ் ஜுரேல் 32* (15) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 192/7 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் பரிதாபமாக தோற்றது.

தவானின் சாதனை:
இந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய நாதன் எலிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் நங்கூரமாகவும் கடைசியில் சற்று அதிரடியாகவும் விளையாடி 86* ரன்கள் குவித்த ஷிகர் தவான் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார். கடந்த 2008 முதல் டெல்லி, மும்பை, டெக்கான், ஹைதெராபாத் உள்ளிட்ட அணிகளில் விளையாடி 6369* ரன்களை குவித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலிக்கு பின் அதிக ரன்கள் குவித்த 2வது வீரராக ஜொலித்து வருகிறார்.

Shikar Dhawan

1. அந்த நிலையில் நேற்றைய போட்டியில் எடுத்த 82* ரன்களையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 50 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 50*
2. ஷிகர் தவான் : 50*
3. ரோஹித் சர்மா : 41

- Advertisement -

2. அதை விட விராட் கோலியை மிஞ்சி ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 50 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சிறப்பான சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஷிகர் தவான் : 207* இன்னிங்ஸ்
2. விராட் கோலி : 216 இன்னிங்ஸ்

Shikar Dhawan

3. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக சீசனில் குறைந்தபட்சம் ஒரு அரை சதமடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி/ஷிகர் தவான் : தலா 15 சீசன்கள்
2. ரோகித் சர்மா/டேவிட் வார்னர் : தலா 14 சீசன்கள்
3. எம்எஸ்/தோனி சுரேஷ் ரெய்னா : தலா 13 சீசன்கள்

- Advertisement -

மேலும் ஐபிஎல் வரலாற்றில் 800 பவுண்டரிகளை அடித்த முதல் தொடக்க வீரர் என்ற சாதனையும் படைத்தார். இருப்பினும் இதுவே இந்த சாதனையை விராட் கோலி அல்லது ரோகித் சர்மா படைத்திருந்தால் மொத்த இந்திய ரசிகர்களும் சமூகவலைதளங்களில் கொண்டாடி தீர்ப்பார்கள் என்றே சொல்லலாம். முன்னதாக ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிய ஷிகர் தவான் முன்னாள் கேப்டன் தோனியின் மகத்தான முடிவால் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

Dhawan 1

அதிலிருந்து 2015 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர், 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் தங்க பேட் விருது, 2018 ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருது என பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு முக்கிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவரை ரோஹித் – விராட் அளவுக்கு கொண்டாடவில்லை என்றாலும் ரசிகர்கள் மிஸ்டர் ஐசிசி என்று அழைத்து வந்தனர். ஆனாலும் 2019 உலக கோப்பையில் சதமடித்து காயத்துடன் வெற்றி பெற வைத்து வெளியேறிய அவர் தற்போது 37 வயதை தொட்டுவிட்டதாலும் சமீப காலங்களில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவிக்க தடுமாறுவதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் இதுவரை யாரும் படைக்காத சாதனை நிகழ்த்தி வரலாறு படைத்த – தமிழகவீரர் அஷ்வின்

அந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தற்போது கேப்டனாக செயல்படும் அவரது தலைமையில் 6 வருடங்கள் கழித்து தனது முதலிரண்டு போட்டிகளில் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement