IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் இதுவரை யாரும் படைக்காத சாதனை நிகழ்த்தி வரலாறு படைத்த – தமிழகவீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் போட்டியானது நேற்று கவுகாத்தி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அற்புதமான வெற்றியை ருசித்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலாவதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

Ashwin

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது துவக்க வீரர்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக அதிரடியான துவக்கத்தை கண்டது. அந்த அணியின் துவக்க வீரரான பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்களை குவித்து அதிரடியான துவக்கத்திற்கு வழி வகுத்தார்.

கேப்டன் ஷிகார் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 86 ரன்கள் அடிக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஓரளவுக்கு கை கொடுக்க பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது :

Ashwin-1

20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக துவக்க வீரராக களம் இறங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் துவக்கவீரராக களமிறங்கியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் வித்தியாசமான ஒரு சாதனையை படைத்து ஐ.பி.எல் வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : ராகுல் சொன்ன மாதிரி கரெக்ட்டா போட்டேன் ஆனா, தமிழக ரசிகர்கள் சத்தம் இருக்கே எப்பா – தோனியின் சிக்ஸர்கள் பற்றி மார்க் வுட்

அதன்படி நேற்றைய போட்டியில் பட்லருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக துவக்க வீரராக களமிறங்கிய அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் ஒன்றாவது இடம் அதாவது துவக்க வீரர் வரிசையில் இருந்து பதினோராவது இடம் வரை அனைத்து இடங்களிலுமே பேட்டிங் செய்ய களமிறங்கிய ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக எந்த ஒரு வீரரும் இதுபோன்ற சாதனையை செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement