வீடியோ : ராகுல் சொன்ன மாதிரி கரெக்ட்டா போட்டேன் ஆனா, தமிழக ரசிகர்கள் சத்தம் இருக்கே எப்பா – தோனியின் சிக்ஸர்கள் பற்றி மார்க் வுட்

Mark Wood
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 தொடரில் 2வது வெற்றிகரமான அணியாக திகழும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிப் பாதைக்கு திரும்பி தன்னுடைய 5வது கோப்பையை வெல்லும் பயணத்தை துவங்கியுள்ளது. குறிப்பாக 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் மஞ்சள் உடை அணிந்து வந்து ஏராளமான தமிழக ரசிகர்கள் சென்னைக்கு ஆதரவு கொடுத்தனர். அந்த ஆதரவுக்கு மத்தியில் ருதுராஜ், டேவோன் கான்வே, சிவம் துபே, ராயுடு உள்ளிட்ட முக்கிய வீரர்களின் அதிரெடியான ரன் குவிப்பால் சென்னை 217 ரன்கள் எடுத்தது.

அதை துரத்திய லக்னோவுக்கு சரபடியாக செயல்பட்டு அச்சுறுத்தலை கொடுத்த கெய்ல் மேயர்ஸை முக்கிய நேரத்தில் அவுட்டாக்கிய மொய்ன் அலி கேப்டன் கேஎல் ராகுல், க்ருனால் பாண்டியா உள்ளிட்ட 4 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதை விட முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு கடைசி ஓவரில் களமிறங்கிய கேப்டன் தோனி பொதுவாகவே 145 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய மார்க் வுட் பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு எடுத்த 12 ரன்கள் இறுதியில் வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

என்னா சத்தம்:
குறிப்பாக இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை தன் வசம் வைத்துள்ள மார்க் வுட் போன்ற அதிரடியான பவுலரை சரவெடி சிக்சர்களாக தோனி பறக்க விட்ட போது சாதாரணமாகவே ஆரவாரம் செய்யக்கூடிய சேப்பாக்கம் ரசிகர்கள் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு விண்ணதிற முழங்கினார்கள் என்றே சொல்லலாம். அப்படி 41 வயதில் மார்க் வுட் போன்ற தரமான பவுலரை அதிரடியாக எதிர்கொண்டு 5000 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்த தோனி பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் அந்த போட்டியில் கேஎல் ராகுல் சொன்னது போல் ஏற்கனவே வகுத்த திட்டத்தின் படி பந்து வீசியதாக தெரிவிக்கும் மார்க் வுட் அதையும் தாண்டி தோனி சிக்ஸர்கள் அடித்து தங்களை வீழ்த்தியதாக பாராட்டியுள்ளார். குறிப்பாக திட்டம் போட்டு வீசிய பவுன்சர் பந்தில் 2வது சிக்ஸரை தோனி பறக்க விட்ட போது சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கொடுத்த ஆரவார குரல் தனது வாழ்நாளில் அதற்கு முன் கேட்டதில்லை என்று வியப்பை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த சமயத்தில் நானும் கேஎல் ராகுலும் பேசிக்கொண்டோம். குறிப்பாக பதற்றமடையாமல் அமைதியாக இருந்து எப்படி அவரை அவுட்டாக்கலாம் என்பதை முயற்சிக்க வேண்டும் என்பதில் நாங்கள் குறியாக இருந்தோம். என்னுடைய மனதில் அந்த நேரத்தில் தடுப்பாட்ட பவுலிங்கை வீச முயற்சிக்கக்கூடாது என்று நினைத்தேன். மாறாக அவரை எப்படி ரன்களை அடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி அவுட்டாக்கலாம் என்று நினைத்தேன். துரதிஷ்டவசமாக இறுதியில் எனக்கு 12 ரன்கள் கிடைத்தது”

“ஆனால் அந்த 2வது சிக்ஸர் ஷாட் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்தப் பந்தை கேஎல் ராகுலும் நானும் எங்கு வீச நினைத்தோமோ அதே இடத்தில் கச்சிதமாக வீசினேன். அதாவது ஒய்ட் போன்ற பவுன்சர் பந்தை வீசினால் அவர் அதை அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுப்பார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவை அனைத்தையும் தாண்டி அவர் அவ்வளவு தூரம் அந்த சிக்சர் அடித்தது அபாரமானது”

இதையும் படிங்க:IPL 2023 : ஜாக்கிரதையா இருங்க. 10 அணிகளை சேர்ந்த வீரர்களையும் எச்சரித்த பி.சி.சி.ஐ – எதற்கு தெரியுமா?

“அதை விட அவர் பேட்டிங் செய்ய களமிறங்கிய போதும் அந்த 2 சிக்ஸர்களை அடித்த போதும் எழுந்த சத்தம் இதற்கு முன் நான் விளையாடியிலேயே கேட்ட மிகவும் அதிகப்படியான சத்தமாகும். அது கண்களை திறக்கும் ஒன்றாக இருந்தது. அதை திரும்பி பார்க்கும் போது நல்ல அனுபவமாக இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக 2018 சீசனில் தோனி தலைமையிலான சென்னை அணியில் அறிமுகமான மார்க் வுட் ஆரம்பத்திலேயே காயமடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement