IPL 2023 : ஜாக்கிரதையா இருங்க. 10 அணிகளை சேர்ந்த வீரர்களையும் எச்சரித்த பி.சி.சி.ஐ – எதற்கு தெரியுமா?

IPL-2023
- Advertisement -

உலகெங்கிலும் பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் கடந்த இரண்டு சீசன்கள் பாதிப்படைந்த வேளையில் இந்த ஆண்டு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால் பிசிசிஐ 10 அணிகளை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

IPL Umpires

- Advertisement -

அதன்படி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 16 ஆவது ஐ.பி.எல் தொடருக்காக 10 அணிகளும் நாடு முழுவதும் பல்வேறு மைதானங்களில் விளையாடி வருவதால் ஆங்காங்கே வீரர்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிசிசிஐ வட்டாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது : கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம். ஆனால் இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. கொரோனா வழிமுறைகளை பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 5000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

Shami GT IPL 2022

மேலும் தற்போது நாடு முழுவதும் 25000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாங்கள் அறிகிறோம். எனவே இந்தியா முழுவதும் போட்டி நடைபெற நடைபெற்று வருவதால் வீரர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டுள்ளது.

- Advertisement -

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி உள்ளதால் பொது இடங்களில் செல்லும் வீரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது, பொதுமக்களிடம் இருந்து சற்று இடைவெளியுடன் இருப்பது, மாஸ்க் அணிவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : அவசரத்தால் எல்லா மேட்ச்லயும் 40 பந்தில் சதமடிக்க முடியுமா? தடுமாறும் சூரியகுமார் ஃபார்முக்கு திரும்ப ஏபிடி முக்கிய அட்வைஸ்

கொரோனா தொற்று காரணமாக கடந்த சில சீசன்கள் பயோ பபுள் முறையில் நடைபெற்ற வேளையில் தற்போது தான் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement