IPL 2023 : அவசரத்தால் எல்லா மேட்ச்லயும் 40 பந்தில் சதமடிக்க முடியுமா? தடுமாறும் சூரியகுமார் ஃபார்முக்கு திரும்ப ஏபிடி முக்கிய அட்வைஸ்

AB DE villiers Suryakumar Yadav
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய முதல் போட்டியில் பெங்களூருவிடம் படுதோல்வியை சந்தித்தது. கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்தை சந்தித்த அந்த அணி இம்முறை வெற்றிப்பாதைக்கு திரும்பி 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. ஆனால் பும்ரா இல்லாத நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய பந்து வீச்சு கூட்டணி முதல் போட்டியில் 171 ரன்களை 16 ஓவரிலேயே வாரி வழங்கி கொஞ்சமும் போராடாமல் வெற்றியை கொடுத்தனர்.

Suryakumar yadhav MI vs RCB.jpeg

- Advertisement -

அதை விட பேட்டிங்கில் ரோகித் சர்மா 1 (10), இசான் கிசான் 10 (12) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தடவலாக செயல்பட்ட நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவும் தடுமாறி 15 (16) ரன்களில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 48/4 என திண்டாடிய அந்த அணியை நல்ல வேளையாக இளம் வீரர் திலக் வர்மா 84* ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார். முன்னதாக ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியாக பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் சூரியகுமார் யாதவ் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறியுள்ளார்.

ஏபிடி அட்வைஸ்:
குறிப்பாக எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பெரும்பாலானவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே திணறும் அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தார். அந்த சாதனை தான் தற்போது மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி டி20 கிரிக்கெட்டிலும் அவரது ஆட்டத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் தாம் உட்பட யாராலுமே அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக சதமடிக்க முடியாது என்று தெரிவிக்கும் உண்மையான மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டீ வில்லியர்ஸ் இந்த மோசமான தருணத்தில் பதற்றமடைந்து தன்னுடைய ஆட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அடிப்படையை பின்பற்றுவதே சூரியகுமார் ஃபார்முக்கு திரும்புவதற்கான வழி என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் தற்போது ஏதாவது செய்ய வேண்டிய ஒரு தருணத்தில் இருக்கிறார். ஆனால் அதற்காக பதற்றமடைந்து உங்களுடைய போட்டியின் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் இருப்பதே இதிலிருந்து வெளிவருவதற்கான ரகசியமாகும்”

- Advertisement -

“குறிப்பாக கடந்த வருடங்களில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எதைப் பின்பற்றினாரோ அதை அவர் தொடர வேண்டும். அதே சமயம் என்னுடைய அடிப்படைகள் என்ன அல்லது கடந்த சில வருடங்களில் நான் தொடர்ச்சியாக ரன்களை அடிக்க என்ன செய்தேன் என்பதை திரும்பிப் பார்த்து அதை அவர் மீண்டும் செய்ய முயற்சிக்கலாம். ஏனெனில் அவர் தன்னுடைய ஆட்டத்தை முற்றிலும் வித்தியாசமான அளவில் விளையாடினார். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் சற்று மெதுவாக விளையாடி பின்னர் அதிரடியை துவக்குவது மோசமானதாக இருக்காது”

ABD

“ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் 40 பந்தில் 100 ரன்களை அடிக்கலாம் என்று நினைப்பது நடக்காது. அதை தான் நான் சின்னசாமி மைதான ரசிகர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் நான் சதமடிப்பேன் என்று எதிர்பார்ப்பார்கள். அதனால் சில சமயங்களில் “ஏபி நீ பந்தை சரியாக படிக்கவில்லை. எனவே சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை விராட் கோலிக்கு கொடு” என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். அப்படி மெதுவாக செட்டிலானால் பின்னர் என்னால் அதிரடியாக விளையாட முடியும்”

இதையும் படிங்க:வீடியோ : கடவுள் ஆசிர்வாதம் எப்போவும் இருக்கும் அடிச்சு தூள் கிளப்பு – மும்பை போட்டிக்கு முன் தல தோனியை வாழ்த்திய சீக்கா

“சில நேரங்களில் பவுலர்கள் வீசும் மோசமான பந்துகளை பயன்படுத்தி நம்மால் ஃபார்முக்கு வர முடியும் என்ற எண்ணத்துடன் விளையாட வேண்டும். பொதுவாக நான் எந்த கியரில் விளையாடுகிறேன் என்று நினைத்துப் பார்ப்பேன். அந்த வகையில் சூரியகுமார் தற்போது 2வது கியரில் இருக்கிறார். எனவே இந்த நிலைமைக்கு மதிப்பு கொடுத்து இதிலிருந்து 3வது கியருக்கு எப்படி செல்ல முடியும் என்று திட்டமிட்டு விளையாடுங்கள்” என கூறினார்.

Advertisement