சென்னையை பந்தாடிய கப்பார் தவான் ! முறுக்கிய மீசையுடன் படைத்த முத்தான 3 சாதனைகள் இதோ

Shikar Dhawan 88
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை பதம் பார்த்த பஞ்சாப் 11 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை சுவைத்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 187/4 ரன்களை குவித்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக நட்சத்திர அனுபவ தொடக்க வீரர் ஷிகர் தவான் 88* (59) ரன்களும் பனுக்கா ராஜபக்சா 42 (32) ரன்களும் விளாசினர். சென்னை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் ட்வயன் ப்ராவோ 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Shikar Dhawan

- Advertisement -

அதை தொடர்ந்து 188 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ராபின் உத்தப்பா 1 (7) மிட்செல் சான்ட்னர் 9 (15) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த சிவம் துபே 8 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் 40/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய சென்னையை மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கைக்கவாட் 4 பவுண்டரியுடன் 30 (27) ரன்களில் அவுட்டாகி காப்பாற்ற தவறினார்.

வெளியேறும் சென்னை:
அந்த நிலைமையில் அவருடன் களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்த அனுபவ வீரர் அம்பாதி ராயுடு அவர் சென்றபின் அதிரடி சரவெடியாக பேட்டிங்கை வெளிப்படுத்தி 7 பவுண்டரி 6 சிக்சர்கள் உட்பட 78 (39) ரன்களை விளாசி சென்னையின் வெற்றிக்காக தனி ஒருவனை போல போராடி ஆட்டமிழந்தார். இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்எஸ் தோனியும் 12 (8) ரன்களில் அவுட்டாக மெதுவாக விளையாடிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா 21* (16) ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ஓவர்களில் 171/6 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை போராடி தோற்றது.

PBKS vs CSK Rishi Dhawan

இந்த தோல்வியால் பங்கேற்ற 8 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்த சென்னை புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு 90% குறைந்து போயுள்ளது. மறுபுறம் பங்கேற்ற 8 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் 6-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.

- Advertisement -

கப்பார் தவான்:
பஞ்சாப் அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு 88* ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இப்போட்டி அவருக்கு 200-வது ஐபிஎல் போட்டியாக அமைந்த நிலையில் 37/1 என தடுமாறிய களமிறங்கிய அவர் தனது அணியை ராஜபக்சா உடன் இணைந்து 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான நிலையை எட்ட வைத்தார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 88* ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் பஞ்சாப்பின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார். ரசிகர்களால் “கப்பார்” என அழைக்கப்படும் அவர் இந்த போட்டியில் அட்டகாசமாக விளையாடியதன் வாயிலாக ஒருசில அற்புத சாதனைகளை படைத்துள்ளார் அதை பற்றி பார்ப்போம்.

1. முதலில் கடந்த 2008 முதல் டெல்லி, மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதெராபாத், பஞ்சாப் போன்ற அணிகளுக்காக காலம் காலமாக விளையாடி வரும் அவர் ஐபிஎல் வரலாற்றில் 200 போட்டிகளில் விளையாடிய 8-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

- Advertisement -

2. அதைவிட இப்போட்டியில் 88* ரன்களை விளாசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்களை கடந்து அதிக ரன்கள் எடுத்த 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 6402 (207 இன்னிங்ஸ்) :
2. ஷிகர் தவான் : 6086* (198 இன்னிங்ஸ்)
3. ரோஹித் சர்மா : 5764 (216 இன்னிங்ஸ்)

3. மேலும் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 9000 ரன்களை கடந்த அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 3-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 10392
2. ரோஹித் சர்மா : 10048
3. ஷிகர் தவான் : 9000*

- Advertisement -

4. இத்துடன் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான 2-வது அணி என பெயரெடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:

இதையும் படிங்க : பொல்லார்டு அடிக்காம விட்டார்னு சந்தோசப்படுங்க! க்ருனால் பாண்டியாவை விளாசிய முன்னாள் வீரர் – என்ன நடந்தது?

1. ஷிகர் தவான் : 1077, சென்னைக்கு எதிராக.
2. ரோஹித் சர்மா : 1015, கொல்கத்தாவுக்கு எதிராக.
3. டேவிட் வார்னர் : 1005, பஞ்சாப்க்கு எதிராக.

Advertisement