ஹைதராபாத் அணியில் கண்ட கனவு.. பஞ்சாப்பில் நிறைவேற காரணம் இதான்.. ஆட்டநாயகன் சசாங் பேட்டி

Shashank Singh
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் நான்காம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 199/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் 89*, சாய் சுதர்சன் 33, ராகுல் திவாட்டியா 23* ரன்கள் அடித்தனர்.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 200 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் 1, ஜானி பேர்ஸ்டோ 22, பிரப்சிம்ரன் சிங் 35, சாம் கரண் 5, சிக்கந்தர் ராசா 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் பஞ்சாப் வெற்றி கேள்விக்குறியான நிலையில் மிடில் ஆர்டரில் அட்டகாசமாக விளையாடிய சசாங் சிங் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61* (29) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஆட்டநாயகன் சசாங்:
அவருடன் கடைசி நேரத்தில் இம்பேக்ட் வீரராக அசத்திய அசுடோஸ் சர்மா 31 (17) ரன்கள் எடுத்ததால் 19.5 ஓவரில் போராடி வெற்றி பெற்றது. அதனால் குஜராத் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு 61* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய சசாங் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் கடந்த வருடம் ஹைதராபாத் அணியில் வாய்ப்பு கிடைக்காத தமக்கு பஞ்சாப் அணியில் 5வது இடத்தில் பேட்டிங் வாய்ப்பு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். அதுவே இப்போட்டியில் தாம் அசத்துவதற்கு காரணம் என்று சசாங் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இன்னும் மூழ்க முயற்சிக்கிறேன். இந்த விஷயங்களை நான் கனவாக பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது எதார்த்தமாக அதை பார்ப்பது நன்றாக இருக்கிறது.

- Advertisement -

“நான் கிரிக்கெட்டுக்கு தேவையான ஷாட்டுகளை விளையாடுகிறேன். பொதுவாக ஏழாவது இடத்தில் நான் பேட்டிங் செய்வேன். ஆனால் இன்று 5வது இடத்தில் பேட்டிங் செய்தேன். பிட்ச்சில் பவுன்ஸ் நன்றாக இருந்தது. அதில் இரு அணிகளும் 200 ரன்கள் அடித்ததால் பிட்ச் அருமையாகவே இருந்தது. எதிரணியின் சில பவுலர்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். ஆனால் நான் அவர்களுடைய பெயரை பார்க்கவில்லை”

இதையும் படிங்க: 70/4 என சரிவு.. 210 ஸ்ட்ரைக் ரேட்டில் குஜராத்தை வெளுத்த சஷாங்.. மும்பையை முந்திய பஞ்சாப் புதிய சாதனை

“பந்தை பார்த்து அதற்கேற்றார் போல் என்னுடைய ஷாட்டை விளையாடினேன். கடந்த வருடம் ஹைதராபாத் அணியில் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இங்கே உள்ள அணி நிர்வாகமும் பயிற்சியாளர்களும் எனக்கு நிறைய ஆதரவை கொடுத்தனர். அதனால் நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் விளையாடினேன்” என்று கூறினார்.

Advertisement