கோலியை விடுங்க.. அவர் தான் எலிமினேட்டரில் தனியாளா ஆர்சிபி’யை ஜெயிக்க வாய்ப்பாரு.. வாசிம் அக்ரம் கணிப்பு

Wasim Akram 9
- Advertisement -

இறுதிக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகப்பெரிய எழுச்சியுடன் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஏனெனில் முதல் 7 போட்டிகளில் 6 தொடர் தோல்விகளை சந்தித்த அந்த அணி ஒரு மாதமாக புள்ளிப்பட்டியலில் திண்டாடியது. அதனால் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு கடைசி 6 போட்டிகளில் 6 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது.

குறிப்பாக மே 18ஆம் தேதி நடந்த வாழ்வா – சாவா போட்டியில் நடைபெற்ற சாம்பியன் சென்னையை தோற்கடித்த பெங்களூரு வீட்டுக்கு அனுப்பியது. அதனால் மகளிரணியை போல இந்த வருடம் ஆடவர் அணியும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது.

- Advertisement -

தனி ஒருவன்:
அந்தப் போட்டியில் வழக்கம் போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ராஜஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து பெங்களூரு அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை 14 போட்டிகளில் 708* ரன்கள் குவித்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியுடன் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் எலிமினேட்டர் போட்டியில் க்ளன் மேக்ஸ்வெல் தனி ஒருவனாக பெங்களூரு அணியை வெற்றி பெற வைப்பார் என்று ஜாம்பவான் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணத்தைப் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக பரிசு கிடைக்கும். கிளன் மேக்ஸ்வெல் தனி ஒருவனாக நாக் அவுட் போட்டியில் ஆர்சிபி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார். எனவே அவரைப் பொறுத்த வரை நீங்கள் உடைமாற்றும் அறையில் பொறுமையுடன் இருக்க வேண்டும்”

- Advertisement -

“தற்போதைக்கு நல்ல ஃபார்மில் இல்லாதது அவருக்கும் ஆர்சிபி அணிக்கும் விரக்தியை கொடுக்கும் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் ஆஸ்திரேலியர்களை பற்றி எனக்குத் தெரியும். குறிப்பாக மேக்ஸ்வெல் எந்தளவுக்கு போட்டி மிகுந்தவர் எந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்பட விரும்புபவர் என்பது எனக்குத் தெரியும். 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவருடைய ஆட்டத்தை நினைத்துப் பாருங்கள்”

இதையும் படிங்க: அஸ்வினோட அந்த திறமையை இந்தியா யூஸ் பண்ணிக்காததை நினச்சா ஏமாற்றமா இருக்கு.. கம்பீர் ஆதங்கம்

“தசைப் பிடிப்பால் நடக்க தெரியாமல் அவதிப்பட்ட அவர் ஒற்றை கையில் விளையாடி 200 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். சிஎஸ்கே அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் அசாத்தியமான வெற்றியை பெற்றதால் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும். நானும் ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்று சொன்னேன். அசாத்தியம் என்று சொல்லவில்லை. இருப்பினும் அனைவரையும் தவறு என்று நிரூபித்த ஆர்சிபியின் கதை அற்புதமானது. அந்த போட்டி ஐபிஎல் வரலாற்றில் எழுதப்படும்” என்று கூறினார்.

Advertisement