70/4 என சரிவு.. 210 ஸ்ட்ரைக் ரேட்டில் குஜராத்தை வெளுத்த சஷாங்.. மும்பையை முந்திய பஞ்சாப் புதிய சாதனை

GT vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் நான்காம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் 17வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய ரித்திமான் சஹா 11 (13) ரன்களில் ரபாடா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக இணைந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாட முயற்சித்து 26 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் எதிர்ப்புறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் அரை சதமடித்து குஜராத்தை ரன்கள் தாண்ட வைத்தார்.

- Advertisement -

பஞ்சாப் வெற்றி:
அப்போது இம்பேக்ட் வீரராக வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 3வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 6 பவுண்டரியுடன் அதிரடியாக 33 (19) ரன்கள் அடித்து அவுட்டானார். அந்த நிலையில் வந்த விஜய் சங்கர் 8 (10) ரன்களில் தடுமாற்றமாக விளையாடி ரபாடா வேகத்தில் அவுட்டானாலும் எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய சுப்மன் கில் கடைசி வரை அவுட்டாகாமல் 4 பவுண்டரி 6 சிக்சருடன் 89* (48) ரன்கள் குவித்தார்.

அவருடன் கடைசி நேரத்தில் ராகுல் திவாட்டியா சரவெடியாக 23* (8) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் குஜராத் 199/4 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 200 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன்னில் உமேஷ் யாதவ் வேகத்தில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோ 22 (13) ரன்களில் நூர் அகமது சுழலில் கிளீன் போல்ட்டானார். அவருடன் எதிர்புறம் சேர்ந்த விளையாடிய பிரப்சிம்ரன்சிங் அதிரடியாக 35 24) ரன்கள் எடுத்த போது மீண்டும் நூர் அஹ்மத் சுழலில் சிக்கினார். அப்போது கை கொடுக்க வேண்டிய ஷாம் கரன் ரன்களில் அவுட்டானதால் 70/4 என பஞ்சாப் தடுமாறியது.

அந்த சமயத்தில் லோயர் மிடில் ஆர்டரில் வந்த சசாங் சிங் அதிரடியாக விளையாடிய நிலையில் அவருடன் 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சிக்கந்தர் ராசா தடுமாறி 15 (16) ரன்களில் மோகித் சர்மா வேகத்தில் அவுட்டானார். அப்போது வந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 16 (8) ரன்களில் ஆட்டமிழந்தார். இம்பேக்ட் வீரராக வந்த அசுதோஷ் சர்மா அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய பஞ்சாப்புக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

தர்ஷன் நல்கண்டே வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே அசுதோஸ் சர்மா 31 (17) ரன்களில் அவுட்டானது பரபரப்பை உண்டாக்கியது. ஆனாலும் எதிர்ப்புறம் தில்லாக விளையாடிய சசாங் சிங் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61* (29) ரன்களை 210.34 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.5 ஓவரில் 200/7 ரன்கள் எடுத்த பஞ்சாப் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: அந்த எரியால சொதப்புறோம்.. ஆர்சிபி ஜெயிக்க நீங்க நின்னு அடிக்கணும்.. விராட் கோலிக்கு ஏபிடி கோரிக்கை

அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி மும்பையின் (5 முறை) சாதனையை உடைத்த பஞ்சாப் (6 முறை) புதிய சாதனை படைத்தது. அதனால் குஜராத் சார்பில் அதிகபட்சமாக நூர் அஹ்மத் விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement