ஆர்சிபி’க்கு எதிரா பிளான் வெச்சிருக்கோம்.. அதை சமாளிக்கலைன்னா வெளிய அனுப்பிடுவோம்.. ப்ராவோ பேட்டி

Dwayne Bravo 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெறும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான போட்டிக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றன. எனவே அப்போட்டியில் வெல்லும் அணி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற உள்ளது.

அதன் காரணமாக கிட்டத்தட்ட நாக் அவுட் போன்ற இப்போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதில் பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று அற்புதமான ஃபார்மில் இருக்கிறது. எனவே சிஎஸ்கே அணியை தோற்கடித்து பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

- Advertisement -

ப்ராவோ திட்டம்:
மறுபுறம் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற அனுபவத்தை வைத்து ஆர்சிபி அணியை தோற்கடிக்க சென்னை போராட உள்ளது. இதற்கிடையே மழை பெய்ய உள்ளதால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் காணப்படுகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியை வீழ்த்துவதற்கு திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவிக்கும் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் ட்வயன் ப்ராவோ தெரிவித்துள்ளார்.

இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் எதிரணியை மதிக்க வேண்டும். அந்த வகையில் ஆர்சிபி அணியை நாங்கள் மதிக்கிறோம். ஒரு அணியாக நாங்கள் அதற்கு முழுமையாக தயாராகி நல்ல திட்டங்களை வைத்துள்ளோம். ஆர்சிபி எங்களுடைய திட்டத்தை முறியடிக்க முயற்சிக்க வேண்டும். அதை செய்தால் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள்”

- Advertisement -

“இல்லையென்றால் இங்கிருந்து வெளியேறி அடுத்த வருடம் விளையாட வருவார்கள். எங்களுடைய திட்டத்தை வெளியிட விரும்பவில்லை. ஆனால் கடந்த வருடமும் இந்த வருடமும் நாங்கள் இளம் பவுலர்களை வைத்து ஓரளவு நன்றாக செயல்பட்டு வருகிறோம். டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர் பவுலிங் மிகவும் முக்கியம். பெரும்பாலான தருணங்களில் அது தான் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும்”

இதையும் படிங்க: அவர் இல்லனா விராட் கோலிக்கு இன்னைக்கு இந்தளவுக்கு வளந்துருக்க முடியாது.. கவாஸ்கர் சர்ச்சை கருத்து

“வானிலை மீது எங்களுடைய கட்டுப்பாடு கிடையாது. எனவே எங்களில் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தை கொண்டு வர நாங்கள் முயற்சிக்கவில்லை. இது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான மற்றொரு போட்டியாகும். அதில் ஒரு நல்ல அணிக்கு எதிரான சவாலை நாங்கள் எதிர்கொள்ள காத்திருக்கிறோம்” என்று கூறினார். இந்த நிலையில் ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement