அந்த எரியால சொதப்புறோம்.. ஆர்சிபி ஜெயிக்க நீங்க நின்னு அடிக்கணும்.. விராட் கோலிக்கு ஏபிடி கோரிக்கை

Ab De Villers Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் 4 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக வழக்கம் போல இந்த வருடமும் பெங்களூரு அணியின் பவுலிங் சுமாராக இருப்பது தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதே போல பேட்டிங்கிலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடி 203* ரன்கள் குவித்து போராடி வருகிறார். ஆனால் அவரைத் தவிர்த்து கேப்டன் டு பிளேஸிஸ், கிளன் மேக்ஸ்வெல், நம்பர் ஒன் கிரீன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காதது பெங்களூரு அணியின் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்து வருகிறது.

- Advertisement -

ஏபிடி கோரிக்கை:
அதனால் இந்த வருடம் சொந்த ஊரில் சொந்த மைதானத்தில் 2 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்த முதல் அணி என்ற பரிதாப சாதனையையும் பெங்களூரு படைத்தது. இந்நிலையில் ஓப்பனிங்கில் களமிறங்கும் விராட் கோலி அப்படியே ப்வர் பிளே கடந்து 15 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாட வேண்டும் என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் அங்கே தான் சமீபத்திய போட்டிகளில் பெங்களூரு அணி பெரிய ரன்கள் எடுக்க தவறியதாக அவர் கூறியுள்ளார்.

எனவே ஓப்பனிங்கில் டு பிளேஸிஸ் ரிஸ்க் எடுத்து விளையாடட்டும் ஆனால் நீங்கள் நிதானமாக விளையாட வேண்டும் என்று விராட் கோலிக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஏபி டீ வில்லியர்ஸ் பேசியது பின்வருமாறு. “இந்த நல்ல துவக்கத்தை விராட் கோலி தொடர்வார் என்று நம்புகிறேன். ஏனெனில் மிடில் ஓவர்களில் அவரின் நங்கூரமான ஆட்டம் ஆர்சிபி அணிக்கு தேவைப்படுகிறது”

- Advertisement -

“நமக்கு அவர் முதல் 6 ஓவர்கள் முழுமையாக விளையாடுவது அவசியம். அவர் அப்படி விளையாடுவதையே நானும் பார்க்க விரும்புகிறேன். அங்கே டு பிளேஸிஸை ரிஸ்க் எடுத்து விளையாட விடுங்கள். ஆனால் விராட் கோலி 6 – 15 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அங்கே தான் ஆர்சிபி நெருப்பாக விளையாட வேண்டும். இதுவரை இந்த தொடர் ஆர்சிபி அணிக்கு மோசமாக அமையவில்லை”

இதையும் படிங்க: ரோஹித் தலைமையில் இது நடக்கலையா? சிஎஸ்கே மாதிரி மும்பையும் செய்யலாம்.. பாண்டியா பற்றி சேவாக் கருத்து

“அதே சமயம் சிறப்பாகவும் அமையவில்லை. தற்போது பாதியில் இருக்கும் அவர்களுக்கு சில வெற்றிகள் தேவைப்படுகிறது. எனவே மீண்டும் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு திரும்புவதற்கு முன்பாக அவர்கள் வெற்றிகளை பெறுவார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார். இதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூரு தனது அடுத்த போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement