அதை விமர்சித்து அழுது பொலம்பாம முடிஞ்சா திறமைய காட்டுங்க.. ரோஹித், சிராஜ் உள்ளிட்டோருக்கு வருண் பதில்

- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற 47வது லீக் போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி வெறும் 154 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35* ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக பில் சால்ட் 68, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் அடித்து 16.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் டெல்லி சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

திறமையை காட்டுங்க:
முன்னதாக இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக பேட்ஸ்மேன்கள் சரமாரியாக பவுலர்களை அடித்து நொறுக்கி வருகிறார்கள். அதற்கு 1 எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனுடன் களமிறங்குவதற்கான வாய்ப்பை கொடுக்கும் இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக இருப்பதாக முகமது சிராஜ் போன்ற பவுலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சொல்லப்போனால் அந்த விதிமுறை சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப கொண்டு வரப்பட்டுள்ள இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு உட்பட்டு அசத்துவதற்கான திறமையை கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அதைப்பற்றி விமர்சித்து அழுது புலம்பக் கூடாது என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இம்பேக்ட் வீரர் பற்றிய விமர்சனங்களுக்கு இப்போட்டியின் முடிவில் அவர் பதிலளித்தது பின்வருமாறு. “ஏதோ ஒரு இடத்தில் ஐபிஎல் முற்றிலும் வித்தியாசமானது என்பதை நாம் ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்ல வேண்டும். கடந்த வருடமே இம்பேக்ட் வீரர் விதிமுறை இருந்தது. ஆனால் அதை கடந்த வருடத்தை விட இம்முறை அனைத்து அணிகளும் சிறப்பாக பயன்படுத்துகின்றன. அதைப் பயன்படுத்தி அனைத்து அணிகளும் ஆரம்பத்திலிருந்து தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர்”

இதையும் படிங்க: டீம் மீட்டிங் அப்போ சுனில் நரேன் மட்டும் வரவே மாட்டாரு.. நானும் கூப்பிடறது இல்ல.. வெற்றிக்கு பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

“எனவே பவுலர்கள் அழாமல் அதை சவாலாக ஏற்க வேண்டும்” என்று கூறினார். இது மட்டுமல்லாமல் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இம்பேக்ட் வீரர் விதிமுறையை குறை சொல்லாமல் எப்படி சாதூகரியமாக பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று யோசிக்குமாறு பவுலர்களுக்கு சமீபத்தில் ஆலோசனை தெரிவித்திருந்தார். இருப்பினும் அந்த விதிமுறைக்கு நிறைய எதிர்ப்புகள் காணப்படுவதால் அடுத்த வருடம் நீக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement