தரமான பவுலர் தான்.. ஆனா அதிக ரன்களை லீக் பண்ணிடுவாரு..2023 உ.கோ ப்ளேயிங் லெவனில் அவரை சேர்க்காதீங்க.. உத்தப்பா கோரிக்கை

Robin Uthappa
- Advertisement -

ஐசிசி 2023 உலக கோப்பையை சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைப்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இறுதிக்கட்டமாக தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக ஆசிய கோப்பையை வென்று சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்த இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது. அதனால் 2011 போல நிச்சயம் இந்தியா கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கப் போகும் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து அசத்தியது அணியை வலுப்படுத்துகிறது. அதே போல முகமது சிராஜ் 2023 கோப்பை ஃபைனலில் 6 விக்கெட்டுகளை எடுத்து உலகின் நம்பர் ஒன் பவுலராக திகழ்கிறார். மேலும் முஹமது ஷமியும் ஆஸ்திரேலிய தொடரில் தம்முடைய அனுபவத்தை காட்டி தரமான பவுலர் என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

உத்தப்பா எச்சரிக்கை:
இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறும் போது கை கொடுக்க வேண்டிய ஆல் ரவுண்டர்களில் பாண்டியா தரமானவர் என்ற சூழ்நிலையில் சர்துல் தாக்கூரை நினைத்தால் தான் ரசிகர்களுக்கு கவலை ஏற்படுகிறது. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கிலும் பெரிய அளவில் ரன்களை எடுக்காத அவர் பந்து வீச்சில் எப்போதாவது மட்டுமே விக்கெட்டுகளை எடுப்பதுடன் தாறுமாறாக ரன்களை வாரி வழங்குகிறார்.

இந்நிலையில் உலகக்கோப்பையில் விளையாடும் 11 பேர் அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்று ராபின் உத்தப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் அவ்வப்போது விக்கெட்டுகளை எடுக்கும் தரமான பவுலராக இருக்கும் தாக்கூர் அதை விட அதிகமாக ரன்களை வாரி வழங்கி விடுவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய அணிக்கு சர்துல் தாக்கூர் கவலையை ஏற்படுத்துபவராக இருக்கிறார். ஆம் அவர் சில விக்கெட்டுகளை எடுக்கும் தரமான பவுலர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அதற்கு நிகராக ஏராளமான ரன்களை கசிய விடுகிறார். குறிப்பாக ரன்களை தாறுமாறாக வழங்கும் அவர் அதை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் சில விக்கெட்டுகளை எடுக்கும் திறமையைக் கொண்டுள்ளார் என்பது உண்மை தான். ஆனால் அவர் விக்கெட்டுகளை எடுக்காத போது மோசமான பவுலராக தெரிவார்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் மட்டுமல்ல 10 டீம் பிளேயர்சும் அந்த கறியை சாப்பிட கூடாது – வெளியான உணவு கட்டுப்பாடு விதிமுறைகள் (டயட் பிளான்)

“குறிப்பாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அவரை நாங்கள் தங்க கையை கொண்டுள்ளவர் என்று அழைப்போம். அதே போலவே இந்திய அணியிலும் அவர் இருக்கிறார்” என்று கூறினார். அதாவது எதிரணி பெரிய பார்ட்னர்ஷிப் போடும் போது அதை எப்படியாவது மேஜிக் பந்து வீசி உடைக்கும் கோல்டன் கைகளை தாக்கூர் கொண்டிருப்பதாக உத்தப்பா கூறியுள்ளார். ஆனால் அதற்கு நிகராக ரன்களை வாரி வழங்குவதால் அவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உத்தப்பா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement