பாகிஸ்தான் மட்டுமல்ல 10 டீம் பிளேயர்சும் அந்த கறியை சாப்பிட கூடாது – வெளியான உணவு கட்டுப்பாடு விதிமுறைகள் (டயட் பிளான்)

Food-Diet
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் ஒரு வாரத்தில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் கோலாலமாக துவங்க உள்ளது. அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. அதனை தொடர்ந்து நவம்பர் 19-ஆம் தேதி இந்து தொடரின் இறுதி போட்டியானது நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்காக தகுதியடைந்து பங்கேற்றுள்ள 10 அணிகளும் தற்போது இந்தியா வந்தடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஒரு சில பயிற்சி போட்டிகளுக்கு பிறகு அனைத்து அணிகளும் லீக் சுற்று போட்டிகளில் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் முன்கூட்டியே இந்தியா வந்துள்ள அனைத்து அணிகளுக்கும் அவர்களது உணவு முறைக்கு ஏற்றார் போல் உணவு கட்டுப்பாடுகளை (டயட் பிளான்) நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் ஹைதராபாத் வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் அவர்களது உணவு கட்டுப்பாடுகள் குறித்த விவரங்கள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி மட்டுமின்றி 10 அணி வீரர்களுக்கும் மாட்டு இறைச்சி கொடுக்க அனுமதிக்கப்படவில்லை. அதை தவிர்த்து சிக்கன், மட்டன், மீன் என அனைத்து வகையான இறைச்சிகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு வீரர்களுக்கு தேவைப்படும் அளவிற்கு சத்தான உணவு வகைகள் அனைத்தும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதில் தானிய வகை, அரிசி வகை, மாவு பொருட்கள் மற்றும் புரதம் நிறைந்த பொருட்கள் என மற்ற எந்த உணவுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. அதேபோன்று சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பட்டர் சிக்கன் என இந்திய பாரம்பரிய வகை உணவுகள் அனைத்தும் அனைத்து வீரர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் அஸ்வின் இருக்காரா.. ஆஸிக்கு எதிரான முதல் 2023 உ.கோ போட்டிக்கான தனது இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட கவாஸ்கர்

மேலும் கிரில் சிக்கன், கிரில் மட்டன், கிரில் மீன் உணவுகளையும் உட்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று கார்போஹைட்ரேட் தேவைப்படும் அணிகள் பாசுமதி அரிசி, பிரவுன் ரைஸ் என எந்த விதமான அரிசி உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement