IND vs NZ : பேட்டிங் மற்றும் பவுலிங் என அசத்திய ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் – போட்டிக்கு பிறகு பேசியது என்ன?

Shardul Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

Shardul Thakur

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்த அசத்தியிருந்தாலும் ஆட்டநாயகன் விருது ஷர்துல் தாகூருக்கு வழங்கப்பட்டது. அதற்கு காரணம் யாதெனில் பேட்டிங்கில் 17 பந்துகளை சந்தித்த அவர் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என முக்கியமான 25 ரன்கள் குவித்ததோடு மட்டுமின்றி பந்துவீச்சில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 6 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Shardul Thakur 1

அதிலும் குறிப்பாக போட்டியின் 26-ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த ஓவர் இந்திய அணியின் வெற்றிக்கு திருப்பும் முனையாகவும் அமைந்தது. இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசியிருந்த ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் பேசுகையில் :

- Advertisement -

அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே என்னை மிகவும் விரும்புகிறார்கள். என்னுடைய செயல்பாட்டினை அவர்கள் ரசிக்கவும் செய்கிறார்கள். எதிரணிக்கு எதிராக நான் எப்பொழுதுமே என்னுடைய ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறேன். அந்த வகையில் அதிகமாக எதையும் முயற்சி செய்யாமல் என்னுடைய திறன் என்னவோ அதை வைத்து அவர்களை எதிர்கொண்டு வருகிறேன். வித்தியாசமான சூழ்நிலைகளில் பந்துவீச தயாராக இருக்கிறேன்.

இதையும் படிங்க : 2023 உ.கோ’க்கு சரியான ஓப்பனிங் ஜோடியா? கங்குலி – சேவாக் சாதனையை தகர்த்த ரோஹித் – கில் ஜோடி புதிய சாதனை

அதுவும் எனக்கு ஒரு பிளஸ்ஸாக இருக்கிறது. முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகள் கிடைப்பது மகிழ்ச்சி. அதேபோன்று பேட்டிங்கிலும் எனக்கு மிகவும் விருப்பம் இருக்கிறது. தற்போதைய கிரிக்கெட் உலகில் பேட்டிங் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அறிந்ததே என ஷர்துல் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement