எல்லோருமே தோனியை இப்போ ரொம்ப மிஸ் பண்றாங்க. ஏன் தெரியுமா? – நினைவு கூர்ந்த ஷர்துல் தாகூர்

Shardul-Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் மதியம் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக தற்போது ராஞ்சி சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் பயிற்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஷர்துல் தாகூர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து பல்வேறு விஷயங்களை நினைவு கூர்ந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது உள்ள எல்லோருமே தோனியை மிஸ் செய்கிறார்கள்.

ஏனென்றால் அவருடைய அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது. தோனி 300க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் போட்டிகளிலும், ஏகப்பட்ட டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அவரை போன்ற ஒரு அனுபவம் மிக்க வீரரை சந்திப்பது அரிது. ஒரு போட்டியின் முடிவை பொறுத்து பவுலர்களை நாம் விமர்சிக்க கூடாது.

shardulthakur3

ஏனெனில் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்துதான் ரன் எண்ணிக்கையும் வரும். சில நேரங்களில் நாங்கள் 350 ரன்கள் வரை விட்டுக் கொடுக்கும் போட்டிகளில் கூட விளையாடுகிறோம். ஏனென்றால் அதுபோன்ற மைதானங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்க்கு சாதகமான ஒன்று. அதனால் எப்பொழுதுமே பந்துவீச்சாளர்களை விமர்சிப்பதை விட மைதானத்தின் தன்மையை பார்க்க வேண்டும்.

- Advertisement -

இருந்தாலும் நாங்கள் பெரும்பாலான தொடர்களை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் வெற்றிகரமாக முடித்துள்ளோம். எனவே நிச்சயம் இந்த தொடரையும் வெற்றியுடன் முடிப்போம் என்று ஷர்துல் தாகூர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : ஐசிசி டி20 உ.கோ வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

நான் தொடர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன். ஏனெனில் பேட்டிங்கின் போது 7,8,9 ஆகிய இடத்தில் இறங்கி பந்துவீச்சாளர்கள் ரன்களை அடித்துக் கொடுத்தால் நிச்சயம் அது அணிக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும். அந்த வகையில் தான் நான் இந்திய அணிக்கு பங்களிக்க வேண்டும் என்று பேட்டிங்கிலும் கடினமாக உழைத்து வருகிறேன் என ஷர்துல் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement