வலைப்பயிற்சியின் போது காயமடைந்த இந்திய வீரர். இதை சாக்கா வச்சே அணியில் இருந்து – தூக்கவும் வாய்ப்பு இருக்கு

Shardul
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணியானது இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்காக தற்போது இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்யும் முடியும் என்பதால் இந்திய அணியின் வீரர்கள் கூடுதலான நேரத்தை செலவிட்டு பயிற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த வலைப்பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் காயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஷர்துல் தாகூர் இன்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் வீசிய பவுன்சர் பந்து ஒன்று அவரது தோள்பட்டையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதன் காரணமாக கடுமையான வலியை அனுபவித்த அவர் சிறிது நேரம் வலைப்பயிற்சியில் இருந்து வெளியேறினார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சின் போது மோசமாக செயல்பட்ட அவர் ரன்களை வாரி வழங்கியதோடு ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியிருந்தார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா ஸ்ட்ரிக்ட்டா இருக்கணும்.. நம்ம பவுலிங் இப்படி ஆகும்னு எதிர்பாக்கல.. டிகே கவலை

அதன் காரணமாக ஷர்துல் தாகூரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன. இவ்வேளையில் இப்படி இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அவர் காயமடைந்திருப்பதால் அதனை காரணம் காட்டியே அவரை இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கவும் வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement