ரோஹித் சர்மா ஸ்ட்ரிக்ட்டா இருக்கணும்.. நம்ம பவுலிங் இப்படி ஆகும்னு எதிர்பாக்கல.. டிகே கவலை

Dinesh Karthik 3
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2025 தொடரின் ஒரு அங்கமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் சென்சூரியன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

குறிப்பாக உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாத இந்தியா இரண்டரை நாட்களில் தோல்வியை சந்தித்து தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்கும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா இத்தொடரை சமன் செய்வதற்கு கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

- Advertisement -

ஸ்ட்ரிக்ட்டா இருக்கணும்:
முன்னதாக 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான அதே பிட்ச்சில் தென்னாப்பிரிக்கா 408 ரன்கள் குவிக்கும் அளவுக்கு முதல் போட்டியில் பும்ரா, சிராஜ் ஆகியோரை தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, சர்துள் தாக்கூர் ஆகிய இந்திய பவுலர்கள் வள்ளலாக ரன்களை வாரி வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் ரசித் கிருஷ்ணா போன்ற பவுலர்களிடம் கேப்டன் ரோஹித் சர்மா கண்டிப்பாக நடந்து கொள்ளவில்லை என தினேஷ் கார்த்திக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஒரு கட்டத்தில் புவனேஸ்வர் குமார், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரால் அதிரடியாக செயல்பட்ட இந்திய பவுலிங் அட்டாக் தற்போது தடுமாறுவதாகவும் அவர் கவலை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பிரசித், சர்துள் ஆகியோர் தங்களுடைய விளையாட்டில் மேல்நோக்கி வர வேண்டும். மறுபுறம் ரோகித் சர்மா இவர்கள் இளம் பவுலர்கள் என்பதால் முதல் முறையாக தடுமாறுகிறார்கள் என்று அவர்களிடம் கனிவாக நடந்து கொள்கிறார்”

- Advertisement -

“ஆனால் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் நன்றாக விளையாடிய சர்துல் இம்முறை பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் மோசமாக விளையாடினார். பிரசித் கிருஷ்ணா இளம் வீரர் என்றாலும் அதிகப்படியான முதல் தர கிரிக்கெட்டில் விளையாடாததால் கேப்டனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட முடியாமல் கட்டுப்பாடின்றி ரன்களை வாரி வழங்கினார்”

இதையும் படிங்க: 263க்கு ஆல் அவுட்டாக்கி 327 ரன்ஸ்.. சீனியர் அணிக்கு பாடம் கற்பித்த இந்தியா ஏ அணி.. விவரம் இதோ

“கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்தியா தங்களுடைய பவுலிங் அட்டாக்கை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போதிருந்த பவுலர்களில் முகமது ஷமி தற்போது இருக்கிறார். ஆனால் முன்பு உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இருந்தார்கள். அவர்கள் தொடர்ச்சியாக ஒரே லென்த்தில் வீசக்கூடியவர்கள். அவர்களை இந்த போட்டியில் இந்தியா மிஸ் செய்தது”என்று கூறினார்.

Advertisement