263க்கு ஆல் அவுட்டாக்கி 327 ரன்ஸ்.. சீனியர் அணிக்கு பாடம் கற்பித்த இந்தியா ஏ அணி.. விவரம் இதோ

IND vs RSA A
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற பெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இந்தியா கொஞ்சம் கூட போராடாமல் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதன் காரணமாக தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விட்ட இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி விளையாடி வந்த 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி நிறைவு பெற்றுள்ளது.

- Advertisement -

பாடம் எடுத்த இளம் அணி:
பேனோனி நகரில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஏ அணி இந்திய பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கெஸ்லே 34, ஜோகன் வேன் டைக் 41*, தேசெபோ மோர்கி 42 ரன்கள் எடுக்க இந்தியா ஏ அணி சார்பில் அதிகபட்சமாக ஆவேஸ் கான் 5 விக்கெட்டுகளும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் ஆரம்பத்திலேயே 18 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மற்றொரு துவக்க வீரர் சாய் சுதர்சன் 5 பவுண்டரியுடன் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களில் ரஜப் படிதார் 30, சர்ப்ராஸ் கான் 34 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் திலக் வர்மா அரை சதடித்து 50 ரன்களும் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் அதிகபட்சமாக 8 பவுண்டரி 2 சிக்சருடன் 69 ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து அக்சர் பட்டேல் தம்முடைய அனுபவத்தை காட்டி 50* ரன்கள் வாஷிங்டன் சுந்தர் 9* ரன்கள் எடுத்த போது 4 நாட்கள் ஆட்டம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

இதையும் படிங்க: பணத்துக்காக தெ.ஆ வாரியமே செய்த காரியம்.. 50 வருடத்துக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் நிகந்த அரிய நிகழ்வு

தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக பிஜோன் போர்சுன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த வகையில் டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 3 நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டரை நாட்களில் தென்னாபிரிக்காவிடம் தோற்ற சீனியர் இந்திய அணிக்கு அதே நாளில் துவங்கிய பயிற்சி போட்டியில் 4 நாட்கள் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இளம் இந்தியா ஏ அணி பாடம் கற்பித்துள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement