பணத்துக்காக தெ.ஆ வாரியமே செய்த காரியம்.. 50 வருடத்துக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் நிகந்த அரிய நிகழ்வு

Neil Brand
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. அதன் வாயிலாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ள தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

அதை விட 1992 முதல் இதுவரை தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு முறை கூட டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை என்ற மாபெரும் சரித்திரத்தை தென்னாபிரிக்கா தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலிலும் இந்தியாவை 6வது இடத்திற்கு சரிய வைத்த தென்னாப்பிரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

பணமே முக்கியம்:
இந்நிலையில் இந்திய டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு மேற்கொள்ளவிற்கும் தென்னாப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆனால் அதற்காக தென்னாப்பிரிக்க வாரியம் அறிவித்துள்ள அணி தான் தற்போது அனைவரும் திரும்பி பார்க்க வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென்னாப்பிரிக்க வாரியம் ஐபிஎல் போல சிஎஸ்ஏ எனும் டி20 தொடரின் 2வது சீசனை நடத்த உள்ளது. அதில் டேவிட் மில்லர், ரபாடா, மார்கோ யான்சென், ஐடன் மார்க்ரம் உட்பட தென்னாபிரிக்காவின் ஒட்டுமொத்த நட்சத்திர வீரர்களும் பல்வேறு அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

- Advertisement -

அதன் காரணமாக இந்த நியூசிலாந்து தொடரில் நெய்ல் பிராண்ட் எனப்படும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 27 வயது கொண்ட இளம் வீரர் தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று தென்னாப்பிரிக்க வாரியம் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக கடந்த 50 வருடங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே கேப்டனாக செயல்படப் போகும் 2வது வீரர் என்ற தனித்துவமான சாதனையை நெய்ல் பிராண்ட் படைக்க உள்ளார்.

இதையும் படிங்க: ஒரே பவுலர் 45 நிமிடம்.. 2வது போட்டியில் கம்பேக் கொடுக்க ரோஹித் சர்மா போடும் பிளான்

கடைசியாக கடந்த 50 வருடங்களில் 1995இல் நியூசிலாந்து வீரர் லீ ஜெர்மோன் இதே போல அறிமுக போட்டியிலேயே கேப்டனாக களமிறங்கியிருந்தார். மொத்தத்தில் பணமே முக்கியம் என்று தென்னாப்பிரிக்க வாரியம் எடுத்துள்ள இந்த முடிவால் இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத 7 வீரர்கள் 2024 நியூசிலாந்து தொடரில் விளையாட தேர்வாகியுள்ளனர். அந்த அணி பின்வருமாறு. நெய்ல் பிராண்ட் (கேப்டன்), டேவிட் பேடிங்கம், ருவன் டீ ஸ்வர்ட், க்ளைட் பார்சுன், ஜூபையர் ஹம்ஸா, தேசேபோ மொர்கி, மிலாளி போங்வானா, டுவான் ஓலிவர், டேன் பீட்டர்சன், கீகன் பீட்டர்சன், டேன் பீட், ரேனர்ட் வேன் டோண்டர், ஷான் வோன் பெர்க், காயா ஜோண்டோ

Advertisement