ஒரே பவுலர் 45 நிமிடம்.. 2வது போட்டியில் கம்பேக் கொடுக்க ரோஹித் சர்மா போடும் பிளான்

Rohit Sharma Nets
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அப்போட்டியில் கொஞ்சம் கூட போராடாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

அதன் காரணமாக தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று மாபெரும் சரித்திரம் படைப்பதற்கான வாய்ப்பை மீண்டும் இந்தியா கோட்டை விட்டுள்ளது. அது போக இந்த படுதோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போது 6வது இடத்திற்கு சரிந்து மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

- Advertisement -

உழைக்கும் ரோஹித்:
இதைத்தொடர்ந்து குறைந்தபட்சம் இத்தொடரை சமன் செய்வதற்கு ஜூன் 4ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில் அனுபவ வீரர்களில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் போராடியும் கேப்டன் ரோகித் சர்மா மோசமாக செயல்பட்டது தோல்விக்கு காரணமானது.

அதிலும் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களுக்கு ரபாடாவிடம் அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகி தென்னாபிரிக்க மண்ணில் 12 வருடங்கள் கழித்து டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்தார். இந்நிலையில் 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுப்பதற்காக ரோஹித் சர்மா தற்போது கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக சமீபத்தில் அறிமுகமான இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமாரை பிட்ச்சின் 4 – 6 மீட்டர் பகுதிகளுக்குள் தொடர்ந்து வீச சொல்லி 45 நிமிடங்கள் ரோகித் சர்மா பயிற்சி எடுத்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல் போட்டியில் ரபாடா வீசிய இன்கமிங் பந்துகளில் தடுமாறிய கதையை நிறுத்துவதற்காக இந்த முறையில் ரோகித் பயிற்சி எடுத்ததாக தெரிய வருகிறது.

இதையும் படிங்க: அவர் மட்டும் இல்லனா 2023 வேற லெவலா இருந்திருக்கும்.. 2024ல ஆச்சும் சாதிங்க.. வாழ்த்திய வெங்கடேஷ் பிரசாத்

அந்த பயிற்சியில் சிறப்பாக பந்து வீசி சிலமுறை தம்முடைய பேட்டை தோற்கடித்ததற்காக முகேஷ் குமாருக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதே சமயம் முகேஷ் குமாருக்கு மணிக்கட்டு பகுதி மற்றும் எந்த வகையான லென்த்தில் பந்து வீச வேண்டும் என்ற சில ஆலோசனைகளை ரோகித் சர்மா கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் திட்டத்துடன் உழைக்கும் ரோகித் சர்மா 2வது போட்டியில் அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement