அவர் மட்டும் இல்லனா 2023 வேற லெவலா இருந்திருக்கும்.. 2024ல ஆச்சும் சாதிங்க.. வாழ்த்திய வெங்கடேஷ் பிரசாத்

Venkatesh Prasad
- Advertisement -

விரைவில் 2024 ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக துவங்க உள்ள நிலையில் 2023 வருடம் உலகின் பல்வேறு மக்களுக்கும் வேறு விதமாக அமைந்தது. அந்த வரிசையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 2023ஆம் ஆண்டு மிகவும் சராசரியானதாகவே அமைந்தது என்று சொல்லலாம். குறிப்பாக சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா தற்போது 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது.

அதன் வாயிலாக உலகிலேயே தென்னாப்பிரிக்காவுக்கு பின் ஒரே நேரத்தில் 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் முதலிடம் பிடித்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையை படைத்தது. அதை தவிர்த்து இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் போன்ற அணிகளை தெறிக்க விட்டு மீண்டும் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

- Advertisement -

சுமாரான இந்தியா:
ஆனால் அவற்றை தவிர்த்து உண்மையாக வெற்றி பெற வேண்டிய இடங்களில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது என்றே சொல்லலாம். ஆம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய இந்தியா லண்டன் ஓவலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பி கோப்பையை வெல்லும் வாய்ப்பை 2வது முறையாக கோட்டை விட்டது.

அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்ற இந்தியா கண்டிப்பாக 2011 போல கோப்பையை வெல்லும் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். ஆனால் மீண்டும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பிய இந்தியா கைக்கு கிடைத்த சாம்பியன் பட்டத்தை கோட்டை விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

இந்நிலையில் அந்த தொடர்களின் இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட் சதமடிக்காமல் போயிருந்தால் 2023 இந்தியாவுக்கு மகத்தான வருடமாக இருந்திருக்கும் என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இந்த வருடம் கற்ற பாடங்களை வைத்து அடுத்த வருடமாவது 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை இந்தியா நிறுத்தும் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்த அதிர்ஷ்டம் நமக்கு இல்லாம போச்சே.. நியூசிலாந்து தொடருக்கான தெ.ஆ அணியால்.. இந்திய ரசிகர்கள் ஆதங்கம்

“இந்த வருடம் இந்திய அணிக்கு மகத்தான வருடமாக இருந்திருக்கலாம். உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய இந்தியாவுக்கு முக்கியமான இறுதிப் போட்டி மோசமான நாளாக அமைந்தது. அதே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோற்றோம். அந்த 2 போட்டிகளிலும் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடினார். எனவே அடுத்து வரும் வருடத்திலாவது சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று கடந்த ஒரு தசாப்தமாக சந்தித்து வரும் தோல்விகளை இந்தியா நிறுத்தும் என்று நம்புகிறேன். அடுத்த வருடம் மட்டுமின்றி எப்போதும் இந்தியாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement