இந்த அதிர்ஷ்டம் நமக்கு இல்லாம போச்சே.. நியூசிலாந்து தொடருக்கான தெ.ஆ அணியால்.. இந்திய ரசிகர்கள் ஆதங்கம்

RSA Team
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் முதலாவதாக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை மழைக்கு மத்தியில் சமன் செய்த தென்னாபிரிக்கா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

அதன் வாயிலாக 1992 முதல் இதுவரை தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் மாபெரும் கௌரவ சரித்திர சாதனையை தக்க வைத்து தென்னாப்பிரிக்கா அசத்தியுள்ளது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலிலும் இந்தியாவை 6வது இடத்திற்கு தள்ளிவிட்டு தென்னாப்பிரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் ஆதங்கம்:
மறுபுறம் 2023 உலகக்கோப்பை தோல்விக்கு இத்தொடரிலாவது வென்று ஈடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இந்திய தொடரை முடித்துக் கொண்டு அடுத்ததாக நியூசிலாந்துக்கு பறக்கும் தென்னாப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க அணி தான் தற்போது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அடுத்த மாதம் ஐபிஎல் போல தென்னாப்பிரிக்க வாரியம் நடத்தும் சிஎஸ்ஏ டி20 தொடர் நடைபெற உள்ளது. அதில் ரபாடா, ஐடன் மார்க்ரம் போன்ற அத்தனை தரமான நட்சத்திர தென் ஆப்பிரிக்க வீரர்களும் பல்வேறு அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

- Advertisement -

போதாகுறைக்கு டீன் எல்கரும் இந்திய தொடருடன் ஓய்வு பெறுவதால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் நெயில் பிராண்ட் தலைமையில் முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்ட 2வது தர தென்னாப்பிரிக்க அணி விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது போன்ற அணி தற்போது நடைபெற்று வரும் தொடரில் அறிவிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக அதை தோற்கடித்து முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் வென்றிருக்கலாமே என இந்திய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் அதில் கேப்டன் உட்பட 7 பேர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன் விளையாடாத வீரர்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க: 50 ஓவர் உலகக்கோப்பை முழுவதும் கடும் வலியுடன் தேசத்திற்காக விளையாடிய முகமது ஷமி – வெளியான தகவல்

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க அணி: நெய்ல் பிராண்ட் (கேப்டன்), டேவிட் பேடிங்கம், ருவன் டீ ஸ்வர்ட், க்ளைட் பார்சுன், ஜூபையர் ஹம்ஸா, தேசேபோ மொர்கி, மிலாளி போங்வானா, டுவான் ஓலிவர், டேன் பீட்டர்சன், கீகன் பீட்டர்சன், டேன் பீட், ரேனர்ட் வேன் டோண்டர், ஷான் வோன் பெர்க், காயா ஜோண்டோ

Advertisement