50 ஓவர் உலகக்கோப்பை முழுவதும் கடும் வலியுடன் தேசத்திற்காக விளையாடிய முகமது ஷமி – வெளியான தகவல்

Shami
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசியின் 13-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு 50 ஓவர் உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்கள் அந்த தோல்வியால் துவண்டு போயினர்.

மேலும் முதல் 10 போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதியாக ஏற்பட்ட அந்த தோல்வி வீரர்களையும் மனதளவில் மிகவும் பாதித்தது. அந்த தோல்வியிலிருந்து இந்திய வீரர்கள் மனதளவில் எளிதாக மீள முடியாமல் தங்களது வருத்தங்களையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி உலகக்கோப்பை தொடரின் போது அவர் சந்தித்த வலி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த உலகக்கோப்பையின் ஆரம்பகட்டப் போட்டிகளில் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா காயம் அடைந்து அணியிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படி தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய முகமது ஷமி அந்த போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டும் இன்றி மொத்தமாக இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடிய 7 போட்டிகளில் 24 விக்க்கெட்டுகளை கைப்பற்றி 50 ஓவர் உலககோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரராகவும் சாதனை படைத்தார்.

- Advertisement -

அதோடு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போதும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் இப்படி இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே அவர் பந்துவீச்சில் அசத்தியிருந்தாலும் அந்த தொடர் முழுவதுமே அவர் குதிகாலில் ஏற்பட்டிருந்த காயத்துடன் விளையாடி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா ஜெயிக்கனும்னா நீங்க தான் கேட்டு வாங்கிருக்கனும்.. ரோஹித் கருத்துக்கு கவாஸ்கர் பதிலடி

மேலும் ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் அவர் வலி நிவாரணி ஊசியை போட்டுக் கொண்டுதான் அந்த காயத்துடனே போராடி தான் பந்துவீசி இருக்கிறார். பின்னர் இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்து தான் அந்த காயத்திற்கான சிகிச்சையை தற்போது ஷமி எடுத்து வருவதாகவும் அதற்காகவே அவர் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement