இந்தியா ஜெயிக்கனும்னா நீங்க தான் கேட்டு வாங்கிருக்கனும்.. ரோஹித் கருத்துக்கு கவாஸ்கர் பதிலடி

Sunil Gavaskar 33
- Advertisement -

தென்னாபிரிக்க மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த காரணத்தால் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்ட இந்தியா 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

குறிப்பாக பேட்டிங் துறையில் 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா பந்து வீச்சு துறையில் 408 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட இந்தியா போராடாமல் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

கவாஸ்கர் பதிலடி:
முன்னதாக இந்த தொடருக்கு முன்பாக வலைப்பயிற்சிகளை மட்டுமே செய்த இந்திய அணியினர் தங்களுக்குள்ளேயே குழுக்களாக பிரிந்து இன்ட்ரா ஸ்குவாட் போட்டியில் விளையாடினார்களே தவிர பயிற்சி போட்டிகளில் விளையாடவில்லை. அந்த வகையில் சவாலான தென்னாபிரிக்கா மண்ணில் வெற்றி பெறுவதற்கு முன்கூட்டியே பயணித்து பயிற்சிப் போட்டிகளில் விளையாடாததே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.

அதற்கு கடந்த சுற்றுப்பயணத்தில் தாங்கள் விரும்பிய அளவுக்கு தரமான பவுலர்களைக் கொண்ட எதிரணி உள்ளூரில் கிடைக்காததால் இம்முறை பயிற்சி போட்டிகளை புறக்கணித்ததாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில் உங்களுக்கு வேண்டுமெனில் நீங்கள் தான் பிசிசிஐ சார்பில் தென்னாபிரிக்க வாரியத்திடம் கேட்டு விரும்பும் உள்ளூர் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்று ரோகித் சர்மாவின் கருத்துக்கு சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் உள்ளூர் ஏ அணி அல்லது உள்ளூரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாட வேண்டும் என்று மட்டுமே நான் சொன்னேன். ஏனெனில் அந்த உள்ளூர் வீரர்கள் தங்களுடைய தேர்வுக் குழுவினரை கவர விரும்புவார்கள். அதனால் அவர்கள் பவுலர் அல்லது பேட்ஸ்மேனாக இருந்தாலும் பயிற்சி போட்டியிலேயே தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்”

இதையும் படிங்க: தெ.ஆ மண்ணில் திண்டாடும் ரோஹித் சர்மா.. 12 வருடத்துக்கு பின் இந்திய கேப்டனாக மோசமான சாதனை

“ஆனால் நம்முடைய அணிக்குள்ளேயே நீங்கள் பயிற்சி போட்டியில் விளையாடினால் எப்படி சிறப்பாக தயாராக முடியும். குறிப்பாக நம்முடைய பேட்ஸ்மேன்கள் காயமடைந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் நம்முடைய பவுலர்கள் பவுன்சர்களை வீச மாட்டார்கள். எனவே நீங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அந்நாட்டின் வாரியத்திடம் ஏ அல்லது உள்ளூர் சாம்பியன் அணிக்கு எதிராக பயிற்சி போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கேட்க வேண்டும்” என கூறினார்.

Advertisement