தெ.ஆ மண்ணில் திண்டாடும் ரோஹித் சர்மா.. 12 வருடத்துக்கு பின் இந்திய கேப்டனாக மோசமான சாதனை

Rohit Sharma in RSA
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா 408 ரன்கள் குவித்த அதே பிட்ச்சில் 300 ரன்கள் கூட எடுக்காத இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் தோல்வியை சந்தித்தது.

முன்னதாக 1992 முதல் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா அங்கு ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. கடைசியாக எம்எஸ் தோனி தலைமையில் 2010/11இல் 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இந்தியா 2014இல் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வெற்றியைப் பெற்று சாதனைகளை படைத்தது.

- Advertisement -

திண்டாடும் கேப்டன்:
அதனால் விராட் கோலியாவது தென்னாப்பிரிக்க மண்ணில் காலம் காலமாக சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவருடைய தலைமையிலும் 2017/18இல் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இந்தியா 2021/22இல் 2 – 1 என்ற கணக்கில் போராடி தோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா அந்த குறையை தீர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் அவருடைய தலைமையிலும் தற்போது தோற்றுள்ள இந்தியா முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் நழுவ விட்டுள்ளது. அதை விட 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்த ரோகித் சர்மா சிறப்பான ஃபார்மில் இருப்பதால் இத்தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முழுமூச்சுடன் போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இருப்பினும் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களுக்கு அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். குறிப்பாக 2வது இன்னிங்சில் டக் அவுட்டான அவர் 12 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்தார். கடைசியாக எம்எஸ் தோனி 2011இல் டக் அவுட்டாகியிருந்தார்.

இதையும் படிங்க: என்னுடைய கரியரில் நான் சந்தித்த ஒரேயொரு கடினமான பவுலர்னா அவர்தான் – கவுதம் கம்பீர் வெளிப்படை

மேலும் தம்முடைய கேரியரில் தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா முறையே 14, 6, 0, 25, 11, 10, 10, 47, 5, 0 என வெறும் 128 ரன்களை 12.80 என்ற படுமோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். ஒருமுறை கூட அரை சதமடித்ததில்லை. மொத்தத்தில் விட கேப்டனாகவும் சரி பேட்ஸ்மேனாகவும் சரி விராட் கோலியை விட தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அதள பாதாள செயல்பாடுகளை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement