என்னுடைய கரியரில் நான் சந்தித்த ஒரேயொரு கடினமான பவுலர்னா அவர்தான் – கவுதம் கம்பீர் வெளிப்படை

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2016-ஆம் ஆண்டு வரை 147 ஒருநாள் போட்டிகள், 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதை தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 154 போட்டியில் பங்கேற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கம்பீர் சேவாக்குடன் இணைந்து மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து வந்தார். இடதுகை ஆட்டக்காரரான கௌதம் கம்பீரின் நேர்த்தியான ஆட்டம் இன்று அவரை பயிற்சியாளரக செயல்படும் அளவிற்கு உதவியுள்ளது.

- Advertisement -

இந்திய அணி 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றும்போதும், 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை தொடரை கைப்பற்றும்போதும் இவரது ஆட்டம் அந்த வெற்றிகளுக்கு மிகவும் முக்கியமானது என்றால் மிகை அல்ல.

அந்த அளவிற்கு ஐசிசி நாக்கவுட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய கம்பீர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது லெஜென்ட்ஸ் லீக் போட்டிகளில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார். அதோடு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் கொல்கத்தா அணியின் மென்டராகவும் செயல்பட இருக்கிறார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தான் விளையாடிய போது சந்தித்த கடினமான பவுலர் யார்? என்று ரசிகர் எழுப்பிய ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ள கம்பீர் :

இதையும் படிங்க : விராட் கோலி, பாபர் அசாம் இருவரில் யார் பெஸ்ட்? ஒரே வார்த்தையில் யோசிக்காமல் பதிலளித்த – வாசிம் அக்ரம்

நான் விளையாடியதில் ஒரே ஒரு கடினமான பவுலர் என்றால் அது “முத்தையா முரளிதரன்” தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு முத்தையா முரளிதரன் போன்ற ஒரு வீரர் தான் 800 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்றும் அவருக்கு இணையான திறன் இல்லாத எவரும் அந்த சாதனையை எட்டுவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement