விராட் கோலி, பாபர் அசாம் இருவரில் யார் பெஸ்ட்? ஒரே வார்த்தையில் யோசிக்காமல் பதிலளித்த – வாசிம் அக்ரம்

Wasim-Akram
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை உடைத்து அசைக்க முடியாத வீரராக திகழ்ந்துவரும் விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு மேலாக இன்றளவும் இந்திய அணியின் ரன் மெஷினாக இருந்து பல்வேறு வெற்றிகளை தேடித் தந்துள்ளார். அதோடு முறியடிக்கப்பட முடியாத பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ள கோலி 35 வயதிலும் முழு உடற்தகுதியுடன் சிறப்பாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அவருடைய உடற்தகுதியின் அடிப்படையில் இன்னும் மூன்று-நான்கு ஆண்டுகள் விளையாடும் அளவிற்கு அவர் தன்னை மெருகேற்றி வைத்துள்ளார். அதே வேளையில் பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகமான பாபர் அசாம் தற்போது வரை பாகிஸ்தான் அணிக்காக கிட்டத்தட்ட 260-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் அணி அணி கடந்த சில ஆண்டுகளாகவே பெற்று வரும் முக்கிய வெற்றிகளில் அவரது இருந்து வருகிறது என்றால் அதுமிகையல்ல. ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை 117 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5700-க்கும் மேற்பட்ட ரன்களையும் 19 சதங்களையும் விளாசியுள்ளார்.

இருப்பினும் அவரது டெஸ்ட் மற்றும் டி20 செயல்பாடுகள் ஒருநாள் கிரிக்கெட் அளவிற்கு சிறப்பாக இல்லை என்றே கூறலாம். ஆனால் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகப்பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீப காலமாகவே விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பாபர் அசாமின் பெயரும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் விராட் கோலி இத்தனை ஆண்டுகளாக தொடர்ச்சியாக தனது பார்மை நிரூபித்து இவ்வளவு பெரிய இடத்தை அடைந்துள்ளார் என்றும் பாபர் அசாம் இப்பொழுது தான் தனது கரியரின் இடைப்பகுதியில் இருக்கிறார் எனவே அவரை விராட் கோலியுடன் ஒப்பிடுவது தவறு என்றும் பலரும் பேசி வந்தனர்.

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி.. தேர்வாளர்களுக்கு ஹின்ட் கொடுக்கும் வகையில் – புஜாரா வெளியிட்ட வீடியோ

இந்நிலையில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இருவரில் யார் சிறந்தவர்? என்ற கேள்விக்கு எந்தவித தயக்கமும் இன்றி சட்டென விராட் கோலி தான் எல்லா வகையிலும் சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார். அவர் அளித்த இந்த பதிலானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஒரே மாதிரியான நிலையான ஆட்டத்தை இத்தனை ஆண்டுகளாக வழங்கி வரும் விராட் கோலி தான் மற்றவர்களை காட்டிலும் சிறந்தவர் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement