முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி.. தேர்வாளர்களுக்கு ஹின்ட் கொடுக்கும் வகையில் – புஜாரா வெளியிட்ட வீடியோ

Pujara
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே நடைபெற்ற முடிந்த வேளையில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் அவர்கள் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனர். அதன்படி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்சை விளையாடி இந்திய அணியானது 245 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது டீன் எல்கர் மற்றும் மார்கோ யான்சன் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 408 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 131 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன்காரணமாக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி அடைந்த இந்த தோல்விக்கு பிறகு பல்வேறு விமர்சனங்கள் இந்திய அணியின் மீது எழுந்துள்ள வேளையில் அனுபவமற்ற வீரர்களை நீக்கிவிட்டு இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களான ரகானே மற்றும் புஜாரா ஆகியோரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுகளும் அதிகளவில் எழுந்துள்ளன.

- Advertisement -

இந்நிலையில் அதற்கு ஹின்ட் கொடுக்கும் விதமாக தற்போது இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா ரஞ்சிக்கோப்பை தொடருக்காக தான் தயாராகி வரும் பயிற்சி வீடியோவை வெளியிட்டு இந்திய அணியின் விளையாடுவதற்க தயாராக இருப்பதாக தேர்வாளர்களுக்கு மறைமுகமாக ஹின்ட் கொடுக்கும் வகையில் அந்த வீடியோவினை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : வருங்காலத்தில் அசத்தப் போகும் லெஜெண்ட் பிளேயர்ஸ் அவங்க தான்.. 2 வீரர்களை பாராட்டிய நாசர் ஹுசைன்

இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் வெளிநாட்டு ஆடுகளங்களில் அனுபவம் வாய்ந்த வீரர்களே அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் ரசிகர்களும் அனுபவ வீரர்களை டெஸ்ட் அணியில் சேருங்கள் என்பது போன்ற கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement