வலைப்பயிற்சியில் காயமடைந்த ஷர்துல் தாகூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா? – வெளியான அப்டேட்

Thakur
- Advertisement -

செஞ்சூரியன் நகரில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் வலைப்பயிற்சியில் பங்கேற்று விளையாடி வந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் காயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

அதன்படி வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷர்துல் தாகூருக்கு பவுண்சர் பந்து பட்டு இடது கை தோள்பட்டையில் அடிபட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவர் ஐஸ் பேக்குடன் இருக்கும் ஒரு சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. அதோடு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது அவரது பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்ததால் அவர் நிச்சயம் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலா விளையாடப்போகும் பவுலர் ரெடி.. 45 நிமிடம் ட்ரெய்னிங் எடுத்த ரோஹித் – நல்லமுடிவு தான்

அந்த வகையில் ஷர்துல் தாகூருக்கு காயம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அவருக்கு பெரிதாக எந்த ஒரு ஆபத்தும் இல்லை. அவர் இரண்டாவது போட்டியில் விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் தான் இருக்கிறார் என்றும் தற்போது அவருக்கு இருக்கும் வீக்கம் காரணமாகவே அவருக்கு ஐஸ் பேக் வைக்கப்பட்டுள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement