பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலா விளையாடப்போகும் பவுலர் ரெடி.. 45 நிமிடம் ட்ரெய்னிங் எடுத்த ரோஹித் – நல்லமுடிவு தான்

Prasidh
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அதிர்ச்சி அளித்தது.

மேலும் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்ற குறையை போக்கும் வகையில் இந்த தொடரை சிறப்பாக துவங்குவார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

- Advertisement -

அதன்காரணமாக இரண்டாவது போட்டியில் வென்றால் மட்டுமே இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. இப்படி இந்திய அணி மோசமான நிலையை சந்திப்பதற்கு முதல் டெஸ்ட் போட்டியில் பவுலர்களின் மோசமான பந்துவீச்சும் காரணம் என்ற குற்றச்சாட்டும் அதிகளவு முன்வைக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் படுமோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதாக அனைவருமே வெளிப்படையான கருத்தினை தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா நிச்சயம் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று பல்வேறு தரப்பிலிம் பேசப்பட்டு வந்த வேளையில் அதனை உறுதி செய்யும் விதமாக ரோகித் சர்மாவும் ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி கடந்த ஓராண்டாகவே இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வரும் முகேஷ் குமாரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பிரசித் கிருஷ்ணா, தாக்கூருக்கு பதிலா.. இந்தியா அந்த இளம் பவுலரை செலெக்ட் பண்ணிருக்கனும்.. சல்மான் பட்

ஏனெனில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்று வரும் வலைப்பயிற்சியில் ரோகித் சர்மா முகேஷ் குமாரை அழைத்து தொடர்ந்து 45 நிமிடங்களுக்கும் மேலாக தனக்கு பந்து வீசுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய முகேஷ்மாரை கவனித்த ரோகித் சர்மா நிச்சயம் இந்த இரண்டாவது போட்டியில் அவரை விளையாட வைப்பார் என்றே தெரிகிறது.

Advertisement