பிரசித் கிருஷ்ணா, தாக்கூருக்கு பதிலா.. இந்தியா அந்த இளம் பவுலரை செலெக்ட் பண்ணிருக்கனும்.. சல்மான் பட்

Salman Butt
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அதன் காரணமாக தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு சந்தித்து பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதனால் குறைந்தபட்சம் இத்தொடரை சமன் செய்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிப்பதற்காக ஜூன் 4ஆம் தேதி துவங்கும் கடைசி போட்டியில் நன்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான அதே பிட்ச்சில் தென்னாபிரிக்கா 408 ரன்கள் குவிக்கும் அளவுக்கு இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு காரணமானது.

- Advertisement -

சரியான பவுலர்:
குறிப்பாக ஒருபுறம் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் துல்லியமாக பந்து வீசி போராடிய நிலையில் மறுபுறம் பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துள் தாக்கூர் ஆகியோர் வள்ளலாக ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். அதிலும் குறிப்பாக காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா முதல் போட்டியிலேயே 94 ரன்கள் வாரி வழங்கி ரசிகர்களுக்கும் அணிக்கும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் போன்ற பவுலர்களுக்கு பதிலாக இருபுறங்களிலும் ஸ்விங் செய்யக்கூடிய இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷிதீப் சிங் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தால் இந்தியாவுக்காக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் கூறியுள்ளார். இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தொடரில் இந்தியா தங்களுடைய அணியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துள் தாக்கூருக்கு பதிலாக அர்ஷிதீப் சிங்கை தேர்வு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 135 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய அவரால் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். மறுபுறம் பிரசித் கிருஷ்ணா மற்றும் தாக்கூர் ஆகியோர் எளிதாக நிறைய பவுண்டரிகளை கொடுக்கின்றனர். அந்த இருவருமே பேட்ஸ்மேனுக்கு சவால் கொடுப்பது போல் பந்து வீசவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: 2023இல் அதை தவிர்த்து எல்லாம் சாதிச்சுட்டேன்.. எழுதி வெச்சு அசத்திய கில்.. உருக்கமான பதிவு

முன்னதாக நடைபெற்ற தென்னாபிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் தொடர்நாயகன் விருது வென்றே வெற்றியில் பங்காற்றினார். அதனால் ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் நிறைய விளையாட வைத்து அவரை டெஸ்ட் அணியில் கொண்டு வர வேண்டும் என்று ரவி சாஸ்திரியும் சமீபத்தில் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement