2023இல் அதை தவிர்த்து எல்லாம் சாதிச்சுட்டேன்.. எழுதி வெச்சு அசத்திய கில்.. உருக்கமான பதிவு

Shubman Gill 2
- Advertisement -

உலகம் முழுவதிலும் 2024 புத்தாண்டு கோலாகலமாக துவங்கியுள்ளது. அதில் அனைவரும் 2023ஆம் ஆண்டு சந்தித்த அனுபவங்களில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு 2024 புத்தாண்டில் சிறப்பாக செயல்படுவதற்காக தயாராகியுள்ளனர். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவதற்காக 2023 வருடம் இந்திய கிரிக்கெட் அணிக்கு நிறைய பாடங்களை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

குறிப்பாக 2023 ஆசிய கோப்பை மற்றும் இருதரப்பு தொடர்களை தவிர்த்து முக்கியமான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பிய இந்தியா 2 கோப்பைகளை கோட்டை விட்டது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. எனவே அதிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தற்போது புத்தாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

- Advertisement -

அசத்திய கில்:
இந்நிலையில் 2023இல் தாம் சாதிக்க வேண்டியவற்றை ஆரம்பத்திலேயே பேப்பரில் எழுதி வைத்து சாதித்ததைப் பற்றி இளம் இந்திய வீரர் சுப்மன் கில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவுக்கு அதிக சதங்கள் அடிக்க வேண்டும் என்பது முதல் ஆசையாகும். அதன் படி 7 சதங்கள் அடித்துள்ள அவர் இந்த வருடம் அதிக சதங்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலிக்கு (8) பின் பெற்றுள்ளார்.

அந்த பட்டியலில் 2023 ஐபிஎல் ஆரஞ்சு தொப்பியை வென்று தம்முடைய குடும்பத்தை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும் என்பதே அவருடைய 2வது ஆசையாகும். அந்த ஆசையை 2023 ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய கில் ஆரஞ்சு தொப்பியை வென்று நிஜமாக்கியுள்ளார். இருப்பினும் அந்த பட்டியலில் 3வதாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று அவர் எழுதி வைத்த ஆசை நிறைவேறாமல் போயுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் 2023 வருடத்தின் முடிவு தமக்கு ஏமாற்றமாக அமைந்தாலும் அதிலிருந்து கற்ற பாடங்களை வைத்து 2024ஆம் ஆண்டு அசத்துவதற்கு தயாராக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் உருக்கத்துடன் சுப்மன் கில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக இதை நான் பிரபஞ்சத்திடம் கொடுத்தேன். தற்போது 2023 வருடம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வருடத்தில் நிறைய மகிழ்ச்சியான தருணங்களும் அனுபவங்களும் பாடங்களும் கிடைத்தது”

இதையும் படிங்க: எங்களுக்கு சச்சின் மட்டுமே சவாலை கொடுத்தாரு.. அவரோட அந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணுங்க.. டொனால்ட் அட்வைஸ்

“இந்த வருடத்தின் முடிவு திட்டமிட்டது போல் அமையவில்லை. ஆனால் எங்களிடமிருந்த அனைத்தையும் கொடுத்து எங்களுடைய இலக்கை நெருங்கியதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். 2024இல் இன்னும் எங்களுடைய இலக்கை நெருங்குவோம் என்று நம்புகிறேன். இதே போல நீங்கள் செய்யும் விஷயங்களில் அன்பு, மகிழ்ச்சி மற்றும் பலத்தை பெறுவீர்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Advertisement