எங்களுக்கு சச்சின் மட்டுமே சவாலை கொடுத்தாரு.. அவரோட அந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணுங்க.. டொனால்ட் அட்வைஸ்

Allan Donald 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா இத்தொடரை குறைந்தபட்சம் சமன் செய்வதற்காக கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது.

முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாபிரிக்கா 408 ரன்கள் குவித்த அதே மைதானத்தில் 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கும் அளவுக்கு இந்தியாவின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி ஆகியோரை தவிர்த்து எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் தென்னாப்பிரிக்க பவுலர்களிடம் பெட்டி பாம்பாக அடங்கி தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.

- Advertisement -

சச்சின் டெக்னிக்:
அந்த வகையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் பிறந்து வளர்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் வேகத்துக்கு சாதகமான மைதானங்களைக் கொண்ட தென்னாப்பிரிக்காவில் மீண்டும் சாதிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் தங்களுடைய காலத்தில் இந்தியாவிலிருந்து சச்சின் டெண்டுல்கர் மட்டுமே தென்னாப்பிரிக்க மண்ணில் தங்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்ததாக முன்னாள் ஜாம்பவான் பவுலர் ஆலன் டொனால்ட் பாராட்டியுள்ளார்.

எனவே அவருடைய டெக்னிக்கை 2வது போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “எனக்கு தெரிந்து எங்களுக்கு எதிராக நன்றாக விளையாடிய ஒரு நபர் டெண்டுல்கர் ஆவார். அவர் மட்டுமே தென்னாப்பிரிக்காவில் பேட்டிங் செய்யும் போது மிடில் ஸ்டம்பில் நிற்காமல் விளையாடினார்.
அவர் முன்னோக்கி சென்று அழுத்தி பந்தை மிகச் சிறப்பாக விட்டார்”

- Advertisement -

“எனவே நீங்களும் இங்கே பந்தை சிறப்பாக அடிக்காமல் விட்டால் எளிதாக பெரிய ரன்கள் குவிக்கலாம். நீங்கள் பவுலர்கள் உங்களுக்கு எதிராக வந்து விக்கெட்டை தேடுவதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும். அப்படி அவர்கள் உங்களை தேடி வரும் போது ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்புகளும் தேடி வரும். எனவே பேட்டிங்க்கு கடினமான கேப் டவுன் மைதானத்தில் நடைபெறும் 2வது போட்டியில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் இல்ல.. அந்த டீம் தான் இந்தியாவின் உண்மையான பரம எதிரி.. கம்பீர் அதிரடி கருத்து

முன்னதாக தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த ஒரே ஆசிய வீரர் என்ற மாபெரும் சாதனையை சச்சின் படைத்துள்ளார். குறிப்பாக 15 போட்டிகளில் 1161 ரன்கள் அடித்துள்ள அவர் 3 அரை சதங்கள் 5 சதங்கள் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement