பாகிஸ்தான் இல்ல.. அந்த டீம் தான் இந்தியாவின் உண்மையான பரம எதிரி.. கம்பீர் அதிரடி கருத்து

Gautam Gambhir 22
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பரம எதிரிகளாக பார்க்கப்படுகின்றன. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்கு முழு மூச்சுடன் போராடுவார்கள். அதனால் அனல் பறக்கும் என்பதே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாகவும் விறுவிறுப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 191 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக வென்ற இந்தியா தங்களுடைய கௌரவ சரித்திர சாதனையை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

உண்மையான எதிரி:
இந்நிலையில் பாகிஸ்தானை விட தற்போது ஆஸ்திரேலியா தான் இந்தியாவின் உண்மையான பரம எதிரி என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தைப் பற்றி ஹாட்ஸ்டார்ட் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் நிறைய முறை இந்தியாவை அதிரடியாக தோற்கடித்துள்ளது”

“ஆனால் தற்போது நீங்கள் இரு அணிகளையும் பார்த்தால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானை விட இந்தியா பல மடங்கு முன்னிலையில் இருக்கிறது. அதனால் பாகிஸ்தான் தற்போது இந்தியாவை தோற்கடித்தால் தான் அது ஆச்சரியமாகும். பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வென்றால் அது சாதாரணமாகும். எனவே கிரிக்கெட்டின் அடிப்படையில் பார்க்கும் போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தான் தற்போது டாப் பரம எதிரிகளாகும்”

- Advertisement -

“ஒருவேளை நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர்களிடம் உண்மையான பரம எதிரிகள் யார் என்று கேட்டால் அது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என அவர்கள் சொல்வார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல கிரிக்கெட்டின் அசுரனாக இருக்கும் ஆஸ்திரேலியா 2003 உலகக்கோப்பை ஃபைனலில் கங்குலி தலைமையிலான இந்தியாவை தெறிக்க விட்டு தோற்கடித்ததை மறக்கவே முடியாது.

இதையும் படிங்க: 2வது டெஸ்டில் இந்தியா இன்னும் மோசமா பந்து வீசி தோற்க வாய்ப்பிருக்கு.. ஆலன் டொனால்ட் கணிப்பு

அதே போல இந்த வருடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பை வென்றது. மறுபுறம் 2001இல் ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான வெற்றி நடையை நிறுத்திய இந்தியா கொல்கத்தா டெஸ்டில் வென்று 2 – 1 என்ற கணக்கில் மகத்தான வெற்றி பெற்றது. அதை விட 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா மகத்தான வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement